பொழுதுபோக்கு

அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் தனுஷின் படத்தில் நடித்தேன்.. மனம் திறந்த டிடி

சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் டிடி தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒருமுறை நடிகர் தனுஷ் எனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தனுஷ் மாதிரி ஒருத்தர் எடுக்கும்பொழுது வேண்டாம் என்று எப்படி சொல்வது. அதனால் நானும் சந்தோஷமாக அதற்கு ஒப்புக் கொண்டேன்.

மேலும் தனுஷ் என்னிடம் இந்தப் படத்தில் லேடிஸ்க்கு ஒரு மெசேஜ் சொல்லணும், அதை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்றால் நன்றாக இருக்கும் அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். அவர் சொன்ன அந்த வார்த்தைக்காகத்தான் நான் அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன் என டிடி தெரிவித்துள்ளார். தற்போது டிடி ‘துருவ நட்சத்திரம்’, ‘ஜோஸ்வா’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago