Homeபிக் பாஸ்இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் இந்தியாவையே உலுக்கிய...

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் குற்றவாளி எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பிரச்சனைக்குரிய பிரபலங்களைத் தேடிப்பிடித்து போட்டியாளராக கொண்டு வருகின்றனர். அதிலும் டிஆர்பி ரேட்டிங்காக இவர்கள் அனைவரையும் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி வருகிறார்கள். இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரின் பின்னனியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

bigg-boss
bigg-boss

அதிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து பிரச்சனைகளும் மறைமுகமாகவே இருக்கின்றன. எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. காட்சிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதது பால் ஒளிபரப்பப்படுகின்றன. போட்டியாளர்கள் பலரும் அதிக நேரம் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள்.

அவ்வாறு திடீரென நமிதா வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதுபோல 16 போட்டியாளர்களுக்கும் மூன்று வேளையும் விதவிதமான சாப்பாடுகள் கிடைக்கின்றன. இவற்றை சமைப்பதற்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது என்றும் தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டில் என்னதான் நடக்கிறது என்று பலரும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அக்ஷரா ரெட்டி பற்றிய வெளியாகியுள்ள இந்த செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Bigg boss 5 Tamil contestants
Bigg boss 5 Tamil contestants

அதாவது 2013ஆம் ஆண்டு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரித்த ஜாவியா சுதாகர் தான் இந்த ஸ்ராவ்யா ரெட்டி என வலைதள வாசிகள் கூறிவருகின்றனர். முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு பெயரை மாற்றி அக்ஷரா ரெட்டி என வைத்துக்கொண்டு தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார் என பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தனது கடந்து வந்த வாழ்க்கைப் பயணம் பற்றி பேசும்பொழுது அக்ஷரா தனது அண்ணன் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கூறியிருந்தார். ஆனால் இந்த கேரள வழக்கில் தன்னை சிபிஐ விசாரித்தது என்பதை பற்றி ஏன் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் 1992 இல் பிறந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் இவர் அழகி போட்டியில் வென்ற ஆண்டு 2003. அப்பொழுது அவர் வயது என்ன இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இவர் 1992 ஆம் ஆண்டு பிறக்கவில்லை.

akshra
akshara

விஜய் டிவிக்கு அக்ஷரா ரெட்டி ஒன்றும் புதிய முகம் அல்ல. 2013ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் எனும் பெயரில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர் தான் இந்த அக்ஷரா. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா என்னும் பெயரில் பங்கேற்றுள்ளார்.

akshra
akshra

விஜய் டிவி எப்பொழுதும் பிரச்சினைக்குரிய பிரபலங்களையே தேடி கண்டுபிடித்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்ந்தெடுத்து அழைத்து வருவதாக நெட்டிசன்கள் குறைகூறி வருகின்றனர்.

சற்று முன்