Homeபிக் பாஸ்பிக் பாஸ் அல்டிமேட்டில் நிரூப்பின் பழைய காதலி. காதல் எல்லாம் இருக்க கூடாது என்று வார்னிங்...

பிக் பாஸ் அல்டிமேட்டில் நிரூப்பின் பழைய காதலி. காதல் எல்லாம் இருக்க கூடாது என்று வார்னிங் கொடுத்த வனிதா

பிக் பாஸ் சீசன் 5இல் கலந்து கொண்டு பைனல் வரை சென்ற நிரூப் தற்போது பிக் பாஸ் அல்டிமேலும் கலந்துகொண்டுள்ளார். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகக்கூடிய இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிக் பாசில் இருந்த பல போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். சீசன் 5ஐ பொறுத்தவரை நிரூப், தாமரை மற்றும் சுருதி ஆகிய மூவரும் பிக் பாஸ் அல்டிமேட்டிற்கு வந்துள்ளனர்.

கடந்த 30 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று(31-1-2022) முதல் நாமினேஷன் நடைபெற்றது. அதில் நிரூப், அபிராமி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியை நாமினேட் செய்தார். அப்போது அவர் அபிராமி குறித்து காரணம் கூறுகையில், அந்த காரணம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

ஏற்கனவே பிக் பாஸ் 5இல் இருந்தபோது நிரூப், யாஷிகாவுடன் காதலில் இருந்தது பற்றி கூறி இருந்தார். தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் அவர், அபிராமியுடன் சில வருடங்களுக்கு முன்பு காதலில் இருந்தது பற்றி நாமினேஷனில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது பற்றி உங்களுக்கு தெரியும். அப்போது நான் பார்த்த அபிராமிக்கு இப்போது நான் பார்க்கும் அபிராமிக்கு நிறைய வேறுபாடுங்கள் உள்ளது. இந்த ஒரு நாளில் நான் அவரிடம் பேச வில்லை ஆனால் பல மாற்றங்களை நான் காண்கிறேன். அவர் போலியாக இருப்பது போல தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

niroop abirami

அதே சமயம் நிரூப்பும், அபிராமியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முதலில் யாசிக்கா இப்போது அபிராமி இன்னும் லிஸ்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று சமுக வலைத்தளங்களில் நிரூப்பின் காதல் குறித்து மீம்களும் வர துவங்கி உள்ளது.

நிரூப், அபிராமி காதல் குறித்து ஏற்கனவே அறிந்ததால் தானோ என்னவோ, முதல் நாளே இங்கு காதல் கீதல் எல்லாம் இருக்க கூடாது என்று வனிதா வார்னிங் கொடுத்துள்ளார்.

சற்று முன்