சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 இல்பலர் கலந்துகொண்டனர். அதில் ப்ரியங்கா, அமீர், பாவணி, ராஜு ஆகியோர் இறுதி நிலையில் இருந்தனர். பின்பு பாவணி மற்றும் அமீரும் வெளியேறினர். இறுதியில் பிரியங்கா மற்றும் ராஜா ஆகியோர் வெற்றியின் விளிம்பில் இருந்தனர். அதில், ராஜு வெற்றிக்கனியை பெற்றார்.
பிக்பாஸ் ராஜுவை பற்றி
அவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்துக்கொண்டிருக்கும்போதே பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. அதில் ராஜுவின் கதாபாத்திரம் சவுதி அரேபியாவில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறை தண்டனை அடைவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் 5-இல் நுழைந்தார் ராஜு.
பிக் பாஸ் இன் வெற்றிக்கு பிறகு
பெரும் புயலுக்குப் பின் அமைதி என்பது போல் வெற்றிக்குப் பிறகு சில நாட்கள் பிக்பாஸ் ராஜு அமைதியாகவே இருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு ராஜு மீடியா சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராஜு அளித்த பதில்
அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி எப்போதும் சீரியலில் நடிக்க போகிறீர்கள். அதற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார். இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளித்திரையில் தனக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், அதனால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தன் திரை வாழ்க்கை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி இருக்கிறது என்று கூறி நெகிழ்துள்ளார்.
இதனால், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் ராஜு நடிக்க மாட்டார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது இனி அந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.