பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தவர் நமிதா மாரிமுத்து. அவர் அனைத்து போட்டியாளர்களுடன் கனிவாக பழகி நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் டாஸ்கில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி கூறியிருந்தார் நமிதா. அதில் அவர் பட்ட துன்பங்களையும் இந்த வாழ்க்கையை அவர் வாழ்வதற்காக எதிர்கொண்ட சவால்களையும் பற்றி கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. இவ்வாறு இருக்க கடந்த சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தினால் நமீதா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது.

தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதற்கு இவ்வளவு போராட்டங்களை மேற்கொண்டு அதன் பிறகு அதில் வெற்றியும் கண்ட நாமிதா பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். அவர் கலந்துகொண்ட போட்டிகளில் 90% அவர் வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறார். இதுவரை வெற்றிக்கான மெடல்களை 20 கும் மேல் வாங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் நமிதா.
அதன்பிறகு நமிதா ஒரு முக்கியமான கன்டஸ்டன்ட்டாக அனைவராலும் பார்க்கப்பட்டார். இறுதியில் நமிதா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவார் என்றும் பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து ரகளை செய்ததாகவும், பிக் பாஸ் குழு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் சமாதானம் ஆகாததால் ரெட்கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றியதாகவும் பல வதந்திகள் வெளியாகின.

இப்படி ஒரு சூழ்நிலையில் தற்போது நமிதா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களையும் தனிமை படுத்துவதாக தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா? மற்ற போட்டியாளர்களுக்கும் தோற்றுக் ஏற்பட்டிருக்குமா? போன்ற கேள்விகளை பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்னர் அனைத்து போட்டியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அதற்குப் பிறகுதான் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டனர். இப்படி ஒரு சூழ்நிலையில் நமிதாவிற்கு கொரொனா ஏற்பட்டுள்ளது உண்மையாகும் பட்சத்தில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா அவர்கள் தொடர்வாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.