நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.

நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவுப்பெற்றது. பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை ராஜூ தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்கா தக்கவைத்துக்கொண்டார். மூன்றாவது இடத்தை பவானி பிடித்துக்கொண்டார்.

அடுத்த ‘பிக் பாஸ்’ குறித்தான அப்டேட்களை ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இப்போது பிக் பாஸின் அடுத்த சீசன் தொலைக்காட்சியில் ஒளிப்பராகமல் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜனவரி 30ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து 24X7ஆக ஒளிப்பரப்பாகிறது.
நம்ம #disneyplushotstar இல் மட்டுமே! #BBUltimate pic.twitter.com/1NbcMS6W3H
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 21, 2022
ஓடிடியில் பிக்பாஸ் வெளியாகும் முதல் சீசன் குறித்து ரசிகர்களிடையே இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த சீசனில் புதிய போட்டியாளர்களை களம் இறக்காமல், இதுவரை நடந்து முடித்த சீசனில் ரசிகர்களுக்கு பிடித்தமான, சுவாரசியமான போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களையே கலந்துகொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஓடிடி ‘பிக் பாஸ்’ முதல் சீசனில், பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, கவின், ஷெரின், ஜனனி ஐயர், தர்ஷன், அனிதா, வனிதா, லாஸ்லியா, ஹரிஸ் கல்யாண், ஜூலி, ஆகியோருடன் பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வெளியே போனாலும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்து தனக்கென ஆர்மியை உருவாக்கிய ஓவியாவும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் இருக்கவே இந்த போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக ‘பிக் பாஸ்’ குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியைும் வழக்கம் போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். எனவே ‘பிக் பாஸ்’ சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.