சின்னத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியானது அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது ‘பிக் பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், அடுத்த ‘பிக் பாஸ்’ குறித்தான அப்டேட்களை ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் இப்போது பிக் பாஸின் அடுத்த சீசன் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸின் அடுத்த சீசன் தொலைக்காட்சியில் ஒளிப்பராகமல் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

ஓடிடியில் பிக்பாஸ் வெளியாகும் முதல் சீசன் குறித்து ரசிகர்களிடையே இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த சீசனில் புதிய போட்டியாளர்களை களம் இறக்காமல், இதுவரை நடந்து முடித்த சீசனில் ரசிகர்களுக்கு பிடித்தமான, சுவாரசியமான போட்டியாளர்களை தேர்வு
செய்து அவர்களையே கலந்துகொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஓடிடி ‘பிக் பாஸ்’ முதல் சீசனில், பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, கவின், ஷெரின், ஜனனி ஐயர், தர்ஷன், அனிதா, வனிதா, லாஸ்லியா, ஹரிஸ் கல்யாண், ஜூலி, ஆகியோருடன் பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வெளியே போனாலும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்து தனக்கென ஆர்மியை உருவாக்கிய ஓவியாவும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் இருக்கவே இந்த போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக ‘பிக் பாஸ்’ குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியைும் வழக்கம் போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். எனவே ‘பிக் பாஸ்’ சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.