பிக் பாஸ் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ்சிற்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். சிலரால் பாராட்ட பெற்றாலும் பலரால் யாஷிகா அதிக அளவில் கலாய்க்க பட்டார்.

மிகவும் கவர்ச்சியான யாஷிகா ஆனந்த் அப்போட்டியில் கலந்து கொண்ட சக தோழியான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். மேலும் இவ்விருவரும் அடிக்கடி பப்புக்கு செல்வதும் மற்றும் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி பழகுவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள்.
யாஷிகா ஆனந்தின் நண்பர்களான பாலாஜி முருகதாஸ், நிரூப் இருவரும் அடுத்தடுத்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டனர். அதில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டாப் 5 இடத்தை நிரூப் பிடித்திருந்தார். அதன்பின் ரூ.12 லட்சத்திற்கான பணப்பெட்டியுடன் நிரூப் வெளியே வந்தார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியே வந்த பின்னர் நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ” பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு யாஷிகாவால் தான் கிடைத்தது. அவருடைய பிரபலத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது. இருவருக்கும் செட் ஆகாததால் பேசி விரிந்து விட்டோம்.
எங்களுக்கு பிரேக்கப் ஆனாலும் அதன்பிறகு நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு யாஷிகாவை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். என்றார்.

யாஷிகா விபத்தில் சிக்கி உடல்நிலை தேறிவந்தபின், அவர் முதன் முதலில் நிருப்பை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். ஆரம்ப காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் யாஷிகா – ஐஸ்வர்யா இருவரும் நேரலையில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென லைவ்வில் வந்த நிரூப் யாஷிகாவிற்கு லிப்-டூ-லிப் முத்தம் கொடுத்தார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிரூப், யாஷிகாவை விட்டு ஏன் பிரிந்தேன் என்பதை தெளிவாக விளக்காமல் ஒரே வார்த்தையில் செட்டாகவில்லை என்று கூறியிருப்பது தற்போது ரசிகர்களால் சமூகவலைதளத்தில் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.