நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.
நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு பஞ்சம் இல்லாமல் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 இறுதிப்போட்டி நாளை (ஜனவரி 16) நடைப்பெறுகிறது. அதுமட்டுமல்லாது ரசிகர்களின் மனம் கவர்ந்த நிரூப் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இறுதிப்போட்டியாளர் பட்டியலில் ஒருவர் குறைந்துள்ளார்.
பிக் பாஸ் இறுதிப்போட்டியாளர்களின் பட்டியலில், ராஜூ, பிரியங்கா, பாவ்னி, அமீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர், இதில் ராஜூ மற்ற போட்டியாளர்களை விட பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ராஜூ பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…