Homeபிக் பாஸ்டாப் 5-இல் இருந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு கரோனா - அவரே கூறிய தகவல் உள்ளே!

டாப் 5-இல் இருந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு கரோனா – அவரே கூறிய தகவல் உள்ளே!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீசன் சமீபத்தில் நிறைவுற்றது. பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை ராஜூ தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்கா தக்கவைத்துக்கொண்டார். மூன்றாவது இடத்தை பவானி பிடித்துக்கொண்டார்.

Pavni Bigg boss Tamil

பிக் பாஸ் சீசன் 5 இல் கொஞ்சி பேசும் தமிழால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போட்டியாளர் பவானி. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் பவானி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அதன் பின் சமூகவலைதளம் வழியாக ரசிகர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பிக் பாஸில் ஆரம்பத்தில் என பெயர் நாமினேட் செய்தாலும் ரசிகர்கள் என் மீது அதித அன்பு செலுத்தி வாக்களித்தால் இறுதி வரை பிக் பாஸில் இருக்க முடிந்தது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உள்ளே இருந்த வரை எனக்கு ஆதரவு வழங்கி வந்த ரசிகர்கள் நான் வெளியே வந்தபினும் ஆதரவு வழங்குவார்களா என எண்ணினேன். ஆனால் ரசிகர்களின் அன்பு குறையவில்லை. அதை பார்த்து நான் வியந்து போய்யுள்ளேன். ஆதரவு நன்றி என கூறியிருந்தார்.

pa

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பவானி தனது சமூகவலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” எனக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனையின் படி என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். சிகிச்சையும் பெற்று வருகிறேன். பூரண நலம் பெற்று திரும்பி வர காத்துக்கொண்டிருக்கிறேன். அன்புடன் பவானி என பதிவிட்டுள்ளார்.

pavani

பவானியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிராத்தனை கலந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்