2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படையாக யாக காட்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தை தொடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்களுக்கு 19 பங்கேற்பாளர்களுடன் நடத்தப்படுகிறது.

முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவின் உண்மை தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் சில தனிப்பட்ட காரணத்தின் விளைவாக ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே தானாக விலகிக்கொண்டார். இந்தக் காரணத்தின் காரணமாகவே ஆரவ் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசை பாடலாசிரியர் சினேகன் அவர்கள் பெற்றிருந்தார்.
முதல் சீசன் எதிர்பாராத வெற்றியை தொட்ட நிலையில், இரண்டாவது சீசனும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதில் தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில் அதுவும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாவது சீனில் வனிதா போன்றோர் பங்குபெற்றார்கள். ஆனால் முந்தைய சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் ஆரம்பத்தில் இல்லை என்றாலும் போக போக சூடு பிடித்தது. கவின் லாஸ்லியா காதால் தான் அந்த சீசனின் பேசுபொருளாக இருந்தது.

நான்காவது சீசனை பொறுத்தவரை பங்கேற்பாளர்கள் மிகவும் பரிச்சயமானவர்களாவும், மக்களுக்கு மிகவும் பிடித்தவர்களாகவும் இருந்தனர். ஆகவே நான்காவது சீசன் முதல் சீசன் அளவிற்கு நல்ல டிஆர்பியையும் வரவேற்பையும் சானலுக்கு பெற்றுக்கொடுத்தது.
போட்டியாளர்கள் மத்தியில் ஆரி ஒதுக்கப்பட்டவராக மற்றவர்களின் கேளி, கிண்டலுக்கு ஆளானாலும், அவரின் உண்மைத் தன்மையும், வெளிப்படையான பேச்சும், தைரியமான நடத்தையும் மக்கள் அனைவருக்கும் பிடித்து போக ஆரி நான்காவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாலாவும் தனது உண்மையான குணத்துடன் இருந்ததினாலேயே அவர் இரண்டாவது பரிசை வென்றார்.

இப்பொழுது ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பங்கேற்பாளர்களை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்து, அவர்களை கொரோனா பரிசோதனைக்காக 14 நாட்கள் தனி அறையில் இருக்க வைத்துள்ளனர். மேலும் பங்கேற்பாளர்களின் தேர்வில் மிகவும் கவனம் செலுத்தும் விஜய் டிவி, இந்த சீசனில் மிகவும் பரிட்ச்சயமான முகங்களேயே பங்கேற்பாளார்களாக தேர்தெடுத்திருப்பதாக விஜய் டிவி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்பதற்காக இன்று மூன்று பிரபலங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல இசை சேனலில் முன்னணி தொகுப்பாளராக பணியாற்றி வரும் அபிஷேக் ராஜாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அபிஷேக் ராஜா தொடக்க காலத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தார். இவரின் கவர்ச்சிகரமான பேச்சால் தனது அழகிய வர்ணனையுடன் தனது பணியை செய்து மக்கள் மனதில் அவருக்கென தனி இடத்தை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அபிஷேக்கிற்கு கிடைத்திருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் அவருக்கு மேலுமொரு வெற்றி வாய்ப்பாக அமையும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.