பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டீவியில் தற்போது சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களோடு துவங்கப்பட்ட இந்த நிகச்சியில் தற்போது 17 நபர்கள் உள்ளனர். இந்த 17 பேரில் தாமரை மற்றும் பாவனியை தவிர மற்ற அனைவரும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். கடந்த வாரம் கமல் தொகுத்து வழங்கியபோது லைக் டிஸ்லைக் டாஸ்க் ஒன்று இருந்தது. அதில் அக்சரா அதிகப்படியான டிஸ்லைக் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அவர் அதிக டிஸ்லைக் வாங்கியதால் அழ தொடங்கிவிட்டார். அந்த வீட்டில் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிரான மனப்பான்மையிலும் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அக்சரா, ராஜூவை தனது அண்ணா போன்று நினைத்து பழகி வருகிறார். இந்த நிலையில் கடந்து வந்த பாதை டாஸ்கில் அக்சரா தனது கதையை நேற்றைய எபிசோடில் சொல்லி முடித்தார்.
அவர் கதை சொன்ன பிறகு, ராஜு அவருக்கு லைக் கொடுத்தார். இதை கவனித்த பிரியங்கா, அந்த கதையில் அப்படி என்ன இருந்தது. எதற்காக லைக் கொடுத்தாய் என்று ராஜுவிடம் கேட்க, இருவருக்கும் இடையே சிறு மன கசப்பு ஏற்படுகிறது. அதே சமயம் ராஜுவும் அக்சராவிடும் உன்னை எனக்கு பிடிக்கும் என்பதால் தான் நான் லைக் கொடுத்தேன் என்பதை வெளிப்படையாக கூறினார்.
இதையும் படிங்க: கண்னம்மாவின் குழந்தையாக நடிக்கும் லட்சுமியை இந்த படத்தில் பார்த்துள்ளீர்களா? இவரது அப்பாவும் அக்காவும் இந்த சீரியல் நடிகர்களா!
இப்படியாக அக்சராவின் பிக் பாஸ் பயணம் சென்றுகொண்டிருக்கையில், அவர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட சிக்ஸ் பேக் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் அவர் தனது சிக்ஸ் பேக்கை மிக தெளிவாக காண்பித்துள்ளளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
அக்சரா சொன்ன கதையில் இருந்து அவருக்கு அப்பா இல்லை, அம்மாவிற்கு உடல்நல குறைவு என்பது தெளிவாக தெரிகிறது. அவரது அண்ணன் தான் அவருக்கு எல்லாமே. இப்படியான ஒரு சூழலில் அவர் தன்னை மெருகேற்றி பிக் பாஸ் வரை வந்திருப்பது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று அவரது ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.