Homeபொழுதுபோக்குகண்னம்மாவின் குழந்தையாக நடிக்கும் லட்சுமியை இந்த படத்தில் பார்த்துள்ளீர்களா? இவரது அப்பாவும் அக்காவும் இந்த சீரியல்...

கண்னம்மாவின் குழந்தையாக நடிக்கும் லட்சுமியை இந்த படத்தில் பார்த்துள்ளீர்களா? இவரது அப்பாவும் அக்காவும் இந்த சீரியல் நடிகர்களா!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவோடு வளரும் லட்சுமியை அனைவரும் பார்த்திருப்போம். லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த குழந்தையின் நிஜ பெயர் ரக்சா. இவர் இதற்க்கு முன்பாகவே படத்தில் கூட நடித்துள்ளார். அது மட்டும் அல்லாது இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் தான். வாருங்கள் இவரை பற்றிய பல தகவல்களை பார்ப்போம்.

Baby Raksha
Baby Raksha

கண்ணம்மாவின் குழந்தையாக நடிக்கும் லட்சுமி, இதற்க்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் கேன்சர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையாக நடித்திருந்தது இவர் தான். அதில் நடிக்கும் பொழுது இவரும் கீர்த்தி சுரேஷும் மிகவும் ஜாலியாக இருந்துள்ளனர். லட்சுமி என்னும் ரக்சாவை கீர்த்தி சுரேஷிற்கு மிகவும் பிடித்துப்போய் உள்ளது.

Baby Raksha
Baby Raksha

ரக்சாவின் தந்தை, பிரபல சீரியல் நடிகர் ஷியாம் தான். சன் டீவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் இவரை நாம் பார்த்திருப்போம். கோலங்கள், தென்றல் போன்ற மெகா ஹிட் சீரியல்களில் இவரின் நடிப்பு அசத்தலாக இருக்கும். ஷியாமின் இரண்டாவது மகள் தான் ரக்சா. இவரின் முதல் மகளின் பெயர் நிவாஷினி. இவரையும் நாம் சீரியல்களில் பார்த்திருப்போம்.

Baby Raksha
Baby Raksha family

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” தொடரில் இவர் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது பிக் பாஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள செந்தூர பூவே தொடரிலும் இவரை நாம் பார்த்திருப்போம். சொல்லப்போனால் நிவாஷினியின் மூலமாக தான் ரக்சாவிற்கு ரெமோ படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது.

Baby Raksha
Baby Raksha

“கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலில் டாப்பிங் கொடுப்பதற்காக சென்றபோது நிவாஷினியுடன் ரக்சாவும் சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ஒருவர் ரெமோ படத்தில் நடிக்க இவர் சரியாக இருப்பார் என்று கருதி அந்த படத்தின் இயக்குனரிடம் கூற, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படி தான் தன் திரை பயணத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் ரக்சா.

இதையும் படிக்கலாமே: ராதிகா சரத்குமாரின் மகனா இவர். பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரே என்று அவரது புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்

தற்போது பாரதி கண்ணம்மாவில் இவருடைய நடிப்பு மிகவும் அசத்தலாக உள்ளது என்றே கூறலாம். உண்மையில் இவர் தன் தந்தை மற்றும் அக்காவையே நடிப்பில் மிஞ்சும் அளவிற்கு நடித்து வருகிறார். வருங்காலத்தில் இவர் ஒரு மிகப்பெரிய ஹீரோயின் ஆவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

சற்று முன்