பொழுதுபோக்கு

குட்டி குஷ்பு போலவே இருக்கும் மகள்! ஆச்சர்யப்பட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ‘தர்மத்தின் தலைவன்’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்திக் உள்ளி்ட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

1990களில் குஷ்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த குஷ்புவுக்கு ஒரு படி மேலே போய் கோயில் கட்டி அவருக்கு சிலை வைத்து ரசிகர்கள் வணங்க ஆரம்பித்தனர்.

குஷ்பு நடிகையாக மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் குஷ்பு சினிமாவில் நடித்து வருகிறார்.

குஷ்பு தமிழில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். 1995ஆம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான ‘முறைமாமன்’ படத்தில் குஷ்பு நடித்தார். இப்படத்தை சுந்தர் சி இயக்கினார். அந்த நேரத்தில் குஷ்புக்கு – சுந்தர் சிக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு பின் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குஷ்புவின் இரண்டாவது மகள் அனந்திகா தனது தந்தை சுந்தர் சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் அனந்திகா உடலை குறைத்து சேலை உடுத்தி பார்பதற்கு அப்படியே அச்சு அசலாக குட்டி குஷ்புவாக உள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago