test header
- Advertisement -
Homeபிக் பாஸ்பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி கமலை வறுத்தெடுத்த அபிஷேக். தமிழாடு CM ஆகறதுக்காக இந்த...

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி கமலை வறுத்தெடுத்த அபிஷேக். தமிழாடு CM ஆகறதுக்காக இந்த 100 நாள் நீங்க பண்ற அலப்பறை இருக்கே என்ற அளவிற்கு பேசியுள்ளார். இதோ வீடியோ.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டு இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது வழக்கம். தற்போது பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் இடப்பெற்றுள்ளனர். அதில் ஒருவர் தான் அபிஷேக். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்ப்போம்.

Abishek - Bigg boss Tamil
Abishek – Bigg boss Tamil

பிக் பாஸ் 1 முதல் 4 சீசன் வரை அனைத்து சீசனும் வெற்றி தான். அதனை தொடர்ந்து தற்போது சீசன் 5 துவங்கப்பட்டு அதுவும் அதிகப்படியான பார்வையாளர்களை கொண்டு வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்கிறது. இதில் அபிஷேக் செய்யும் அட்டகாசங்களை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

-advertisement-

யூடுயூப் மூலம் பிரபலமான இவர், பல படங்களை இதுவரை ரெவியூ செய்துள்ளார், பல திரை நட்சத்திரங்களை பேட்டி கண்டுள்ளார். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகும் அங்கிருப்பவர்களை ரெவியூ செய்கிறேன் என்ற பெயரில் இவர் மொக்கை போடுவதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இதையும் படிக்கலாமே: தளபதி விஜய் மற்றும் கமல் ஒரே இயக்குனரின் கீழ் நடிக்க இருக்கும் படங்கள். அசத்தலான அப்டேட்.

அதே போல நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வியின் பட்டை குறித்து அபிஷேக் பேச, அதை கேட்டு தாமரை செல்வி கடுப்பானார். அந்த நேரத்தில் இமான் அண்ணாச்சி வந்து, 2 லட்சம் ஓட்டு போச்சி என்று கூற, அபிஷேக்கின் முகம் உடனே மரியாதை நாம் கண்டிருப்போம். உடனே தாமரை செல்வியின் காலில் அவர் விழுந்துவிடுகிறார்.

-advertisement-

இப்படி பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்துகொண்டிருக்கையில், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருக்கும்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில், “நீங்கள் செய்கிற வேலை எல்லாம் இறுக்கிறதில்லை, கேட்டல் பிக் பாஸ் என்கிறீர்கள். நான் எப்படிப்பட்ட ஜெனெரேஷன் என்றால், கண்ணால் பார்ப்பதை கூடு நம்ப முடியவில்லை, ஏனென்றால் ஊருக்கே தெரியும் உங்களை கேமரா வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால் கிடைத்த இந்த 100 நாட்களில் தமிழ்நாடு முதல்வர் ஆகவேண்டும் என்று நீ செய்கிற வேலை எல்லாம் இருக்கிறது தெரியுமா”, இப்படி அவர் ஏகபோகத்திற்கு பேசி உள்ளார்.

சற்று முன்