தளபதி விஜய் தான் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் வசூல் மன்னனாக உள்ளார் என்றால் அது மிகையாகாது. இவரது படங்கள் எப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக அதை வெற்றி படமாக மாற்றி தருகிறார்கள் அவரது ரசிகர்கள். அதே போல நெடுங்காலமாய் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஒரு நடிகனாக இருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது இவர்கள் இருவரின் அடுத்த சில படங்கள் குறித்த தகவல்கள் கசிய துவங்கி உள்ளன. அது பற்றி விரிவாக பார்ப்போம்.

தற்போது தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் பெயரிடப்படாத தளபதி 66, தளபதி 67 படங்கள் நடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிய ஆரமித்துள்ளது. ஏற்கனவே வெற்றிமாறனின் பிறந்த நாள் தினத்தன்று இந்த தகவல் உலா வந்தது குறிப்பிட தக்கது.
தளபதி 68ஐ பொறுத்தவரை அது இந்தியா முழுக்க உள்ள விவசாயம் சார்ந்த பிரச்னையை கையில் எடுத்து அதை படமாக்க உள்ளதாக கூறுப்படுகிறது. ஏற்கனவே கத்தி படத்தில் விஜய், விவசாய பிரச்சனைகள் பலவற்றை பேசி இருப்பார். அது மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று அந்த படம் வசூல் ரீதியாக மிக பெரிய ஒரு வெற்றி படமாக இருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது தளபதி 68 குறித்த முக்கிய தகவல்கள் சில கசிய ஆரமித்துள்ளன. இயக்குனர் வெற்றிமாறனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் இயக்கும் படங்கள் ஆகட்டும் இல்லை தயாரிக்கும் படங்கள் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் தேசிய விருதை பெரும் அளவிற்கு மிக சிறந்த படைப்பாக தான் இது வரை இருந்துள்ளது. அப்படியான ஒரு இயக்குனர் படத்தில் விஜய் நடித்தால் அது எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக, உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அதோடு சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல் அவர்கள் நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கான தகவல்கள் கசிய துவங்கி உள்ளன. விக்ரம் படத்திற்கு பிறகு கமல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளிவர ஆரமித்துள்ளது. ஒருவேளை வெற்றிமாறன் படத்திற்கு பிறகு இந்திய 2 பட வேலைகள் துவங்குமா அல்லது இரண்டு படங்களிலும் கமல் ஒரே சமயத்தில் நடிக்க போகிறாரா போன்ற விஷயங்கள் தெரியவில்லை. அடுத்தடுத்து 2 மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து வெற்றிமாறன் படம் இயக்க போவதால் படத்தின் கதை சம்மந்தமான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.