சின்னத்திரை தொகுப்பாளினிகளும் நடிகைகள் போன்று தங்கெளுக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளனர். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்கள் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளனர்.

சின்னத்திரை தொகுப்பாளினிகள் இப்போது திரைத்துறையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளனர். சின்னத்திரையில் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் விஜே பாவனா. இவர் அதன் பின் ஐபிஎல் நேரத்தில் விளையாட்டு வர்ணையாளராகவும் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் பாவனா இந்திய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பு, விளையாட்டு வர்ணை என பிஸியாக இருந்த பாவனா இப்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகும் டான்ஸ் vs டான் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்ற பாவனாவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால் ரசிகர்கள் அதை அதிகம் கண்டுகளித்து டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணி வகித்தது.

இந்நிலையில், சமீபத்தில் பாவனாவிடம் மீண்டும் பழைய சேனலுக்கு திரும்பிவருவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவனா கூறுகையில், ” இனிமேல் நான் அங்கு செல்லமாட்டேன். அதுமட்டுமல்லாது அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராது. அந்த தொலைக்காட்சியில் தற்போது ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் நகைச்சுவை கண்ணோட்டத்தில் தொகுத்து வழங்குகின்றனர். என்னால் அந்த அளவிற்கு நகைச்சுவையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமுடியாது. அது என்னுடையை செயல் இல்லை. ஆகவே இனி நான் அங்கு எப்பொழுதும் பணியாற்ற மாட்டேன் என்றார்.

பாவனாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து. என்னதான் இருந்தாலும் வாழ்க்கையை இந்த அளவுக்கு உயர்த்திய சேனலுக்கு திரும்பி வரமாட்டேன்னு சொல்றது நல்ல இல்லை என தங்களது ஆதங்கத்தை கருத்துகளாக பதிவிட்டு வருகின்றனர்.