சினிமாவில் பல நடிகர்கள் திருமணமாகாமல் பேச்சுளராக சுற்றி வருகின்றனர். அதில் மிகவும் குறிப்பிடப்பட்டவர் ஆர்யா மற்றும் விஷால் அவர்கள். ஆர்யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாயிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆர்யா அவர்கள் தந்தை ஆகிவிட்ட நிலையில் விஷால் அவர்கள் இன்னும் அப்படியே பேச்சுளராக தான் இருந்து வருகிறார்.

நடிகர் விஷால் அவர்கள் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவருகிறார். திருட்டு சிடிகளுக்கு எதிராகவும் அவர் பல குரல் கொடுத்தவர். மேலும் அவர் தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் விஷால் அவர்கள் சரத்குமாரின் மகளான வரலட்சுமியுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.. ஆனால் விஷாலுக்கும் சரத்குமாருக்கும் இடையே நல்ல ஒரு உறவு இல்லை. அவர்களுக்குள் நடிகர் சங்க கட்டிடம் காரணமாக பல மன கசப்புகள் இருந்து வந்துள்ள நிலையில் ராதிகா அவர்கள் வரலட்சுமியிடம் விஷாலை பற்றி பேசியதாகவும் அதன் பின்னரே வரலட்சுமியும் விஷாலும் பிரிந்ததாகவும் சில தகவல்கள் கோலிவுட்டில் பரவின.
இருப்பினும் விஷால் மற்றும் வரலட்சுமியிடம் இதைப் பற்றி எந்த பதிலும் இல்லை. இவ்வாறாக இருந்த நிலையில் திடீரென்று விஷாலிற்க்கும் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்க போவதாக உறுதியான செய்திகள் பரவின. மேலும் அதன்பின்னர் நிச்சயதார்த்தம் புகைப்படத்தையும் விஷால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். இது காதல் திருமணம் இல்லை என்றும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் அவர் தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில் நாளடைவில் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் விஷாலிடம் இருந்து வரவில்லை.

இதற்கிடையில் விஷாலுக்கும், அனிஷாவிற்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால் திருமணம் சற்று தள்ளிப் போகும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அவரது ரசிகர்களும் விஷாலுக்கு எப்போது திருமணம் என்று அவரை பார்க்கும் பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
விஷாலுடன் நிச்சயக்கப்பட்டிருந்த அனுஷாவிற்கு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும், அவர் தற்போது அமெரிக்காவில் தன் கணவருடன் செட்டில் ஆகி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால் மனமுடைந்த விஷாலின் தந்தை, சமீபத்தில் யூடீயூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பெட்டியில், விஷால் ஒரு பெண்ணை உண்மையாகத்தான் காதலித்தான் அந்தப் பெண் ஏன் இவ்வாறு செய்தாள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

நான்தான் விஷாலை நடிக்க வற்புறுத்தினேன். என்னால் தான் விஷால் நடிப்பிற்கு வந்தார். ஆனால் என்னால் விஷாலை கல்யாணம் செய்யும்படி வற்புறுத்த முடியாது. விஷால் என்னிடம், எனக்கு எப்பொழுது விருப்பம் இருக்கிறதோ அப்போது தான் திருமணம் செய்வேன் என்று தெளிவாக சொல்லிவிட்டார் . எனவே என்னால் அவரை வற்புறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
விஷாலுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? அவர் திருமணம் செய்து கொள்வாரா? என்பதும் கேள்விக்குறியாகவே அவரது ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. மேலும் அவர் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.