சமயல் சேனல்கள் பல இருந்தாலும் இந்தியா முழுவதும் அறியப்படும் சேனல்கள் வெகு சில தான். அதில் மிகவும் முக்கியமான ஒரு சேனலாக இருக்கிறது வில்லேஜ் குக்கிங் சேனல். “ஆல்வேஸ் வெல்கம்ஸ் யு” என்ற இவர்களது தாரக வாசகம் இந்தியா முழுக்க பிரபலம். வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகள் பலரும் இவர்களது சமையல் வீடியோக்களை பார்த்து அவர்களை போல பேசுவதுண்டு.

கிட்டத்தட்ட ஒரு கோடியே 33 லட்சம் பார்வையாளர்களை கொண்ட இந்த சேனலில் அணைத்து வகையான உணவுகளும் கிராமப்புற பின்னணியில் சமைக்கப்படுகிறது. அதே போல இவர்கள் தாங்கள் சமைத்த உணவுகளை ஆசிரமங்களுக்கு கொடுத்தும் வருகின்றனர். சமீபத்தில் இவர்களது சேனல் இந்தியா முழுவதும் ஒரு பேசுபொருளாக மாறியது.
ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்த சமயம் அவர் இவர்களோடு சேர்ந்து சமைத்து சாப்பிட்டார். அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்டானது. அதே சமயம் இவர்களது சேனலை அறியாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு அனைவரும் அந்த விடியோவை பார்த்தனர். இவர்கள் இதுவரை ஏராளமான அவார்ட்களை தங்களது கடின உழைப்பின் மூலம் பெற்றுள்ளனர்.
இதையும் பாருங்கள்: சட்டையை தூக்கி தனது சிக்ஸ் பேக்கை காட்டி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் அக்சரா. இதோ வீடியோ
சமீபத்தில் இவர்களை குறித்து வெளிவந்த ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், இவர்கள் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் இப்படி ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

அந்த படத்தில் ஒரு திருமண காட்சி வருகிறதாம். அந்த திருமண காட்சியில் வில்லேஜ் குக்கிங் சேனல் ஆட்கள் நடித்துள்ளனராம். இது குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே சமயம் பலரும் அவர்களுக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர். கொரோனா சமயத்தில் இவர்கள் தங்களால் முடிந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.