Homeபொழுதுபோக்குஜிம்மில் சந்தித்த விஜய் - விஜயகாந்த்.ஆச்சரியத்தில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே

ஜிம்மில் சந்தித்த விஜய் – விஜயகாந்த்.ஆச்சரியத்தில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி பேசும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

vija

விஜய் தமிழ் சினிமாவில் 1984ஆம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். இப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான ஏ.எஸ். சந்திரசேகர் இயக்கினார்.

வெற்றி படத்தை தொடர்ந்து விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அது மட்டுமல்லாது விஜயகாந்த் – கெளதமி நடிப்பில் வெளியான ‘செந்தூரபாண்டி’ படத்திலும் விஜய் நடித்துள்ளார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

vijay

‘செந்தூரபாண்டி’ படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த், விஜய், சண்டை இயக்குநர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் உடற்பயிற்சி கூடத்திலிருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்திலை வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், விஜயகாந்த் உடற்பயிற்சி செய்வது போல் இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் விஜய் நிற்கிறார்.

vv

இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் விஜய்யும் விஜயகாந்தும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றும், விஜய் உடற்பயிற்ச்சி செய்து உடற்கட்டமைப்பை பேண வேண்டும் என சமூகவலைதளத்தில் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர்.

சற்று முன்