Homeபுகைப்பட செய்திஅட வித்யூலேகாவா இது? என பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கடல் அலையின் நடுவே பிகினி உடையில்...

அட வித்யூலேகாவா இது? என பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கடல் அலையின் நடுவே பிகினி உடையில் அழகாக போஸ் கொடுத்திருந்த வித்யுலேகாவின் ஹனிமூன் புகைப்படம்

2012ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் வித்யூலேகா ராமன். இந்த படத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் வித்யூலேகா. அவரது குறும்புத்தனமான நடிப்பும், பேச்சும் பலரையும் அவர் பக்கம் கவனிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகைகளின் தோழியாக வலம் வந்திருக்கிறார் வித்யுலேகா ராமன்.

vidhu
vidhulleka

வித்யுலேகா அவர்கள் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகரான மோகன் ராமன் என்பவரின் மகளாவார். தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த வித்யூலேகா தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் சிறந்த காமெடி நடிகை என பலராலும் பாராட்டப் பெற்றார். ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, புலி, வேதாளம், இனிமே இப்படித்தான், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற பல முன்னணி கதாநாயகர்களின் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவ்வாறு வெற்றியின் உச்சத்தில் இருந்த வித்யுலேகா அவர்களுக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன. அந்த சமயத்தில் லாக்டௌன் காரணமாக வித்யூலேகா உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து வந்தார். அவ்வப்போது அவர் உடல் பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டனர்.

vidhu
vidhulleka

இவ்வாறு கொரோனா உச்சத்தில் இருந்த லாக்டௌன் சமயத்தில் தான் வித்யூலேகா தான் காதலித்து வந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்ய முடிவெடுத்து அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விதியூலேக்காவின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டன. இதனை கண்ட வித்யூலேகாவின் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு சஞ்சை மற்றும் வித்யுலேகாவிற்க்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இவர்கள் இருவரும் மாலதீவிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். மாலத்தீவில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வித்யுலேகா இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது கடலில் பிகினி உடையுடன் குளிப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

vidhu
vidhulleka

அவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் முன்பைவிட மிகவும் ஸ்லிம்மாக இருப்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. பிகினியில் விதிவிலக்காவா? என்ற ஆச்சரிய அலைகளையும் ரசிகர்களிடம் எழுப்பி வருகிறது இவர் இப்பொழுது பகிர்ந்துள்ள இந்த புகைப்படம். இதனைத் தொடர்ந்து திருமணமான பின்பும் படங்களில் தொடர்ந்து நடிக்க போவதாக வித்தியாலோக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன்