நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தன் வசீகரமான நடிப்பால் சிறுவர்கள் வரை கவர்ந்தவர். திருச்சியில் தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தன்னிடமிருந்த மிமிக்ரி திறமையை வைத்து விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார்.

இதனைத் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே நடிகராக தன் பயணத்தை தொடங்கினார். அதிலும் அவர் முதல் படம் நடிக்கும் பொழுது வீட்டுக்கு தெரியாமல்தான் நடித்ததாகவும் படம் வெளிவந்த பிறகுதான் வீட்டில் தெரிவித்ததாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இப்படி திரையுலகில் காலடி எடுத்து வைத்த தொடக்கத்தில் பட வாய்ப்புகளை கேட்டு எந்த இயக்குனரிடம் அதிகம் சென்று இருக்கிறீர்கள் என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு. நான் வெங்கட் பிரபு சார் அவர்களிடம் தான் அதிகம் சென்று இருக்கிறேன் எனவும் அவர்தான் இரண்டு மூணு ஹீரோக்களை வைத்து படம் செய்வார் என்றும், ஆரம்பத்தில் 3 மணிநேரம் ஆடியன்சை என்கேஜாக என்னால் வைத்திருக்க முடியுமா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருந்தது. ஆகையால் வெங்கட் பிரபு சார் படமாக இருந்தால் நிறைய ஹோரோக்கள் இருப்பார்கள் அதனால் நாம் ஹீரோவாக இருந்தாலும் நமக்கான காட்சிகளில் நம்முடன் சேர்ந்து இன்னும் சிலரும் இருப்பார்கள். அது ஜாலியாகவும் இருக்கும் ஆடியன்சை என்கேஜாகவும் வைத்திருக்க முடியும் என்று எண்ணினேன். ஆனால் எனக்கான வாய்ப்பு அப்போது கிடைக்கவே இல்லை. அதன் பிறகு ஒருமுறை நாங்கள் இருவரும் இனைந்து ஒரு படம் செய்யவேண்டி இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் உச்சக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இருவரும் இணைந்து ஒரு படம் கொடுத்தால் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்கப்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது