Homeதிரைவிமர்சனம்வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு- வாங்க பார்க்கலாம்.

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு- வாங்க பார்க்கலாம்.

தமிழ் திரை உலகில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாகவும் நடிகை சிதி இத்னானி நாயகியாகவும் நடித்து இன்று (செப்டம்பர் 15) வெளியாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. வழக்கமான கவுதம் வாசுதேவ் மேனன் படம் போல காதல் கதை, போலீஸ் கதை என்று இல்லாமல் இந்த படம் புதிய கோனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும் போதே இது கவுதம் வாசுதேவ் மேனன் படமா என்ற ஐயம் நம் மனதில் இடம்பெறுகின்றது.

கதையின் நாயகன் முத்துவீரன் (எ) முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு கச்சிதமாக பொருந்தியிருக்கார். கதையின் நாயகி பாவை என்ற கதாபாத்திரத்தில் நாயகி சிதி இத்னானி தன் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். விறகு வெட்டி பிழைக்கும் BSC பட்டதாரி வாலிபனாக முத்து நமக்கு அறிமுகமாகிறார். முதல் காட்சியிலே வெட்டி வைத்த விறகுகள் தீ பிடித்து நாசமாக, விறகுக்கு சொந்தக்காரர் 5000₹ நஷ்டஈடு கேட்க, முத்து ஆத்திரத்தில் அவருடன் வாய்த் தகராறில் ஈடுபட்டு கொலை செய்து விடுவதாக சொல்ல, பயந்து போன முத்து அம்மா (ராதிகா) தன் மகனை உறவினரிடம் அழைத்து செல்கிறார்.

முத்துவின் மாமா சேர்மதுரை பணம் கொடுத்து முத்துவுக்கு புது துணிகள், செருப்பு போன்றவை வாங்கி வைக்க சொல்லி அடுத்த நாள் மும்பையில் உள்ள தன் பரோட்டா கடைக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறுகிறார், ஆனால் முத்துவின் மாமா சேர்ம்துரை அன்று இரவு யாரோ மர்ம நபரிடம் போனில் கெஞ்சி கெஞ்சி மன்னிப்பு கேட்பதும், அவர் அருகே கை துப்பாக்கி இருப்பதையும் முத்து கவனிக்குறான். சேர்மதுரை அன்று இரவே தூக்கு போட்டு தற்கொலை செய்கிறார்.

பிழைக்க, தன் குடும்பத்தை காப்பாற்ற மும்பை சென்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் முத்து மும்பை கிழம்புகிறான், கிழம்பும் போது சேர்மதுரை கைத்துப்பாக்கியை எடுத்து செல்கிறான். மும்பை சென்று  தன் மாமா கொடுத்த மும்பை விலாசத்தில் உள்ள இசக்கி பரோட்டா கடையில் வேலைக்கு சேர்கிறான். மும்பை  ரயில் நிலையத்தில் தன்னை போல வேலை தேடி வந்த மலையாளி (நீரஜ் யாதவுடன்) நட்புடன் பழகுகிறான் முத்து. முத்து வேலைக்கு சேரும் எதிர் கூட்டத்தில் அந்த மலையாளி வேலைக்கு சேர்கிறான்

வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் இசக்கி பரோட்டா கடை என்ற பெயரில் தமிழகத்தில் இருந்து பிழைக்க வந்த வாலிபர்களை கூலிப்படைகளாக பயன்படுத்துவதும், ஒரு முறை உள்ளே வந்தால் வெளியே செல்ல முடியாது என்பதையும் தெரிந்து கொள்கிறான் முத்து. தான் எடுத்து வந்த கை துப்பாக்கியையும் மறைத்து வைக்கிறான். கர்ஜி கேங் மற்றும் குட்டி கேங் என்ற 2 ரவுடி கும்பலில் தான் இருப்பது கர்ஜி கேங் என்றும் தன் மலையாளி நண்பன் இருப்பது குட்டி கேங் என்றும் கர்ஜியை குட்டி கேங் கொலை செய்ய முயன்றதும், அதற்கு சேர்மதுரை தகவல் கொடுத்தது தான் காரணம் என கர்ஜி நினைத்ததால் தான் தன் மாமா சேர்மதுரை தற்கொலை செய்துகொண்டார் என தெரிந்து கொள்கிறான் முத்து.

இந்த நிலையில் ஒரு நாள் குட்டி கேங் ரவுடிகள் முத்து மற்றும் இதர கர்ஜி கேங் நபர்கள் தங்கியிருக்கும் இடத்தை முற்றுகையிட்டு தாக்க, கடுமையாக சண்டையிடும் முத்து தான் முன்பு மறைத்து வைத்த கை துப்பாக்கியால் குட்டி கேங்கை சேர்ந்த 8 நபர்களை சுட்டு கொள்கிறான். இதனை கேள்வி பட்ட கர்ஜி முத்துவை தன் பாடி கார்டாக வைத்துக்கொள்கிறான். இதற்கிடையில் முத்து, நாயகி பாவையை (சிதி இதானி) ஜவுளிக்கடையில் வேலை செய்வதை பார்த்து பின்னால் சுற்றி காதலிக்க ஆரம்பிக்கிறான்.

கர்ஜி பாடிகாடான முத்து சில சந்தர்ப்பங்களில் கர்ஜி உயிரை தனி ஆளாக நின்று காப்பாற்ற, கர்ஜியின் வலதுகரமாக மாறிவிடுகிறான் முத்து.  தன் காதலி பாவையையும் திருமணம் செய்து விடுகிறான் முத்து. இசக்கி பரோட்டா கடையில் வேலை செய்யும் சரவனன் (நடிகர் அப்புகுட்டி) குட்டி கேங்குக்கு தகவல் சொல்ல, சூழ்ச்சியால் கர்ஜி கொலை செய்யபட்டு கொலை பலி முத்து மீது விழ, முத்துவை கொலை செய்யவரும் கர்ஜி கேங்கினர் அனைவரையும் கொன்று விடுகிறான முத்து.  துரோகி சரவனன் தான் என அடையாளம் கண்டும் அவனை முத்து மன்னித்து விட, கர்ஜி ஆட்கள் சரவனனை கொலை செய்கின்றனர்.

குட்டி கேங்கில் பெண் போல அடிமையாக வாழும் முத்துவின் மலையாளி நண்பன் அங்கு சமையல் வேலை செய்யும் பெண்னை காதலித்து வருகிறான். கர்ஜி கொலை செய்யபட்ட மகிழ்ச்சியில் குட்டி அந்த பெண்னை கெடுக்க முயல அந்த பெண் குட்டியை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறாள். கர்ஜியை முத்து தான் கொலை செய்தான் என நினைத்து இசக்கி முத்துவை கொலை செய்ய வரும் போது முத்து இசக்கி கையில் சுட்டு உண்மையை கூறி தன்னால் யாருக்கும் தலைகுனிந்து பயந்து நடக்க முடியாது என்கிறான்.

இது தான் கிளைமாக்ஸ் காட்சி என்று நாம் நினைக்கும் போது,ஆ முத்து சொகுசு காரில் பெரிய தாடியுடன் வந்திறங்க, 6  ஆண்டுகள் கழித்து என்று போட்டு விட்டு முத்துவை பெரிய கேங் லீடராக காட்டி, அடுத்த பாகம் தொடரும் என படம் முடிவடைகிறது, முத்து சொகுசு காரில் வரும் போது பேப்பரில் வந்த அவன் புகைப்படத்தை அவன் தங்கை அவன் அம்மாவிடம் காட்ட – 2ம் பாகம் எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் நாம் வெளியே வருகிறோம்.

சற்று முன்