ஹிந்தி சினிமா உலகில் சுமார் 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பிரம்மாஸ்திரம் : பார்ட் 1: ஷிவா”. இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யபட்டு கடந்த 9ம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அமிதாப் பச்சன், சாருக்கான், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய், டிம்பிள் கபாடியா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடதக்கது. இதுவே இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆதிகாலத்தில் முனிவர்கள் தவம் செய்து வனராஸ்ட்ரா, மாயாஸ்ட்ரா, அக்னியாஸ்ட்ரா, நந்தியாஸ்ட்ரா, ஜலாஸ்ட்ரா ஆகிய அஸ்திரங்களை பெற்றிருந்தனர். இவைகளின் மூலமாக சக்தி வாய்ந்த, உலகையே அழிக்க கூடிய பிரம்மாஸ்திரத்தை பிரம்னாஸ் என்ற குழுவினர் காலம் காலமாக பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் சிறு வயதில் தீ விபத்தில் தன் தாயை இழந்து அனாதையாக வாழும் ஷிவா (ரன்பீர் கபூர்) முதல் பார்வையிலே இஷா சேட்டர்ஜியை (அலியா பட்) காதலிக்கிறார். இஷாவும் ஷிவாவை காதலிக்க, ஷிவா தனக்கு ஒரு அபூர்வ சக்தி இருப்பதாகவும், நெருப்பு தன்னை ஒன்றும் செய்வதில்லை எனவும், எதிர்காலத்தில் நடப்பது தனக்கு முன்கூட்டியே தெரிந்து விடுவதாகவும் கூறுகிறார்.
இந்த நிலையில் வனராஸ்டிரா வைத்துள்ள மோகன் பார்கவ் (ஷாருக்கான்) ஜுனூன் (மவுனி ராய்) என்பவரால் தாக்கபட்டு தன்னிடம் இருந்த பிரம்மாஸ்திரத்தின் ஒரு பகுதியை ஜனூன் அபகரிப்பதையும் மீதமுள்ள 2 பகுதியில் ஒன்று அனீஷ் ஷெட்டி (நாகார்ஜுனா) என்பவரிடம் உள்ளதாக கூறிவிட்டு தற்கொலை செய்கிறார்.

இதனை ஷிவா தன் மனக்கண்களில் கண்டு தன் காதலி இஷாவிடம் கூறி காசியில் உள்ள அனீஷ் ஷெட்டியை காப்பாற்ற காசி செல்கிறார். ஜனூன் மறறும் அவருடைய கூட்டாளிகளான சோர், அஃப்டார் ஆகியோர் அனீஷ் ஷெட்டியை தாக்கும் போது ஷிவா அங்கு சென்று காரில் தப்பிக்கிறார்கள். தன் உயிரை விட பிரம்மாஸ்திரத்தை காப்பதே மேல் என கூறி, பிரம்மாஸ்திரத்தின் 2வது பகுதியை ஷிவா மற்றும் இஷாவிடம் கொடுத்து ஆஷ்ரமத்திற்கு அனுப்பிவிட்டு ஜனூனை எதிர்த்து சண்டையிட தயாராகிறார் அனீஷ் ஷெட்டி.
தன்னிடம் உள்ள நந்தியாஸ்திரம் மூலமாக ஜனூன் மற்றும் சோரை மலையில் இருந்து கீழே தள்ளிவிட்டு தானும் மரணமடைகிறார் அனீஷ் ஷெட்டி. ஆஷ்ரம் செல்லும் வழியில் மோகன் பார்கவிடம் இருந்து கைப்பற்றட்ட வனராஸ்திரம் மூலமாக ரஃப்டார் ஷிவா மறறும் இஷாவை தாக்குகின்றான். ஆஷ்ரம நுழைவாயிலில் ரஃப்டார் இஷாவை கொலை செய்ய முயலும் போது தன்னிடம் உள்ள நெருப்பு சக்தியின் மூலமாக ரஃப்டாரை எரித்து சாம்பலாக்குகிறான் ஷிவா.

இதனை கவனித்த குரு (அமிதிப் பச்சன்) முன்னால் பிரம்னாஷ் உறுப்பினரான தேவின் அக்னி சக்தி சிவாவிடம் இருப்பதை உணர்கிறார். தேவ் மற்றும் அம்ரிதா (தீபிகா படுகோன்) தம்பதியின் மகன் தான் ஷிவா என்பதை தெரிந்து கொண்டு பிரம்மாஸ்திரம் எப்படி 3 துண்டுகளாக உடைந்தது, தேவ் எதற்காக பிரம்மாஸ்திரத்தை கைப்பற்ற நினைத்தான், தேவின் மனைவி அம்ரிதா (ஜலாஸ்திரா அதிபதி) எதற்காக தன் கனவனை எதிர்த்து போரிட்டு பிரம்மாஸ்திரத்தை மீட்டார் என்ற பிலாஷ் பேக்கை ஷிவாவிடம் குரு சொல்கிறார்.
ஜனூன் மற்றும் சோர் தப்பி வந்து சிலையாக நிற்கும் தேவின் அக்னி ஷக்தியுடன் கிராமத்துவாசிகளை கொண்டு ஒரு படையை உருவாக்கி ஆஷ்ரமத்தை தாக்கி பிரம்மாஸ்திரத்தின் 3 பாகங்களையும் கைப்பற்றி, தன் உயிரை கொடுத்து பிரம்மாஸ்திரத்தின் 3 பாகங்களையும் ஒன்று சேர்க்கிறார் ஜனூன். உலகம் அழியக்கூடிய பிரளயம் உருவானதா? அதனை ஷிவா எப்படி தடுத்தார், பிரம்மாஸ்திரம் மீட்கபட்டதா? என்பதே கிளைமாக்ஸ்.
அவெஞ்சர்ஸ், தார், டாக்டர் ஸ்டிரேஞ் படம் பார்த்தது போல ஒரு உணர்வு இந்த படத்தை பார்க்கும் போது ஏற்படுகிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கூடுகிறது. இதுவரை நாம் கண்டிராத ஒரு பிரம்மாண்ட படம் தான் இந்த பிரம்மாஸ்திரா பார்ட் 1.. படம் நல்லா இருக்கு கண்டிப்பா பாருங்க பிரண்ட்ஸ்.