Homeபிக் பாஸ்பணக்கார வீட்டு பையன், பெரிய குடும்பம் ஆனாலும் தனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும் பிக்...

பணக்கார வீட்டு பையன், பெரிய குடும்பம் ஆனாலும் தனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும் பிக் பாஸ் சீசன் 5 வருண் கணேஷ் எடுத்த முடிவு?

பிக் பாஸ் சீசன் 5 க்குள் அடியெடுத்து வைத்திருக்கும் வருண் கணேஷ், பணக்கார வீட்டு பையன் என்று பலருக்கும் தெரியாது. பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் வருணின் மாமா. அதாவது ஐசரி வேலனின் பேரன் தான் வருண் கணேஷ். பணக்கார வீட்டு பையனாக இருந்தாலும் வருன் கணேஷுக்கு தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்பதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தார்.

Varun Ganesh
Varun Ganesh
Varun Ganesh
Varun Ganesh

பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிக எளிமையாக இருக்கும் வருண் கணேஷ், காலேஜ் படிக்கும் போதிலிருந்தே நடிப்பின் மீது தனி ஆர்வத்துடன் இருந்தவர். அதனாலேயே தனது கெரியரை அசிஸ்டன்ட் டைரக்டரிலிருந்து தொடங்கினார். ஏஎல் விஜயுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் ஏ எல் விஜய் இயக்கிய விஜய் படமான தலைவா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருண் நடித்திருந்தார்.

தலைவா படத்தின் மூலம் ஓரளவிற்கு மக்களிடத்தில் பிரபலமான வருணுக்கு பல தயாரிப்பாளர்களிடம் இருந்து படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக கோமாளி, பப்பி, ஒருநாள் இரவில், போகன், சீரு போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இருப்பினும் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக நல்ல மேடையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதைப் பற்றி வருண் தனது நண்பர்களுடன் கலந்து பேசிய பொழுது பல நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் பல நெகட்டிவ் விமர்சனங்கள் உனக்கு வந்திட போகுது அதனால் இப்போ வேண்டாம் என்று தடுத்து இருக்கின்றனர். ஆனால் வருண் கணேஷ் தனக்கு கிடைத்த பிக் பாஸ் சீசன் 5 வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மக்களிடத்தில் பெயர் புகழ் பெறுவேன் என்று உறுதியுடன் கூறி இப்போட்டியில் பங்கேற்றிருக்கிறார்.

Varun Ganesh
Varun Ganesh

மேலும் இந்த சீசனில் வருணிடம் இருந்து வேறு மாதிரியான விளையாட்டை எதிர்பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள். வருண் பிக் பாஸ் சீசன் ஐந்தின் வெற்றியாளராக வரவேண்டும் என்பதே அவர் நண்பர்களின் ஆசை. மேலும் இந்த சீசன் பல புதுமுகங்களுக்கு நல்ல ஒரு பிளாட்பார்ம் ஆக அமையும் என்று நம்பப்படுகிறது. பலரும் தங்களது தனித்துவத்தை நிரூபிப்பதற்காகவே பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சற்று முன்