சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு என தற்போது ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினிகள் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் உண்டு.

அந்த வகையில், அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்பதற்கென்றே மக்கள் உள்ளனர். நகைச்சுவை கலந்தும் மொக்கை அடித்தும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை தனது தனி ஸ்டைலாக கொண்டுள்ளார் பிரியாங்கா.

தற்போது பிரியங்கா ‘பிக் பாஸ்’ என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டார். இதனால் அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை மைனா நந்தினி என்பவர் தொகுத்து வழங்கினார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தால், மீண்டும் தனது பணிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரியங்கா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த ஆரம்பகட்டத்தில் ‘ஒல்லி பெல்லி’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அவருடன் ஈரோடு மகேஷூம் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்துவந்தார். அப்போது எடுத்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில், பிரியங்கா ‘ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியின் பெயர் போன்றே ஒல்லியாக இருந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம குண்டு பிரியங்காவா அப்போ இப்படி ஒல்லியா இருந்தார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று மற்றொரு புகைப்படத்தில் தளபதி விஜய்யுடன் பிரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.