விஜய் டீவியில் எப்போது பிக் பாஸ் ஆரமிக்கப்பட்டாலும், சில சீரியல்கள் வேறு நேரத்திற்கு மாற்றப்படும், சில சீரியல்கள் மூடுவிழா காணும். அதற்க்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல. தற்போது 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் வேறு நேரத்திற்கு மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் எந்தெந்த சீரியல்கள் நிறுத்தப்படும் என்ற கேள்வியும் சிலருக்கு ஏற்படும்.

தற்போது, அதற்கான விடையாக தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர் சீரியல் அதன் முடிவை எட்டியுள்ளது. ஆகையால் இந்த சீரியல் பிக் பாஸ் ஆரமிப்பதற்கு முன்பாக முடிந்து விடும் என்று தெரிகிறது. அதுகுறித்த சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவர துவங்கி உள்ளது. ஜாக்லினும் அதுகுறித்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் படித்தது போதும் என்று சீரியலை முடித்திவிட்டார்கள் என்று கிண்டலாக கூறியுள்ளார் ஜாக்லின். இந்த சீரியலில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக்லின் பி.ஏ வரை அதில் படித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இந்த சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடும்பம் மற்றும் அரசியலை மையமாக கொண்டு இந்த நாடகத்தை எடுத்து வருகின்றனர். ஜாக்லின் முதன்முறையாக சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிய சீரியல் இது தான்.
தேன்மொழியாக நடித்துள்ள ஜாக்லின் இக் கதாபாத்திரத்தில் மிகவும் வெகுளியாகவும் வெளிப்படைத்தன்மை ஆகவும் நடித்திருப்பார். இதனால் அனைவர் மனதிலும் தேன்மொழி நீங்கா இடம் பெற்று வருகிறார். தேன்மொழி அவரது கணவரான சித்தார்த்தை ஹீரோ ஹீரோ என்று அழைப்பது அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இதற்கு முன்பே இந்த சீரியல் ஒருமுறை சிலகாலம் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நாடகத்தின் மூலம் ஜாக்லின் அவர்கள் சின்னத்திரையில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது இது முடிவுக்கு வரவுள்ளது. அதன் காரணமாக கதையில் சில எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு அனைத்து நிகழ்வுகளும் சுபமாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.