விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வராததல் ரசிகர்கள் ஏமாற்றில் உள்ளனர்.

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கவுள்ளார்.
சமீபகாலமாக விஜய் தான் நடிக்கும் படத்தில் அரசியல் குறித்தான விழிப்புணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் விதம் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘தளபதி 66’ படமும் அமையும் தெரியவந்ததுள்ளது.

‘தளபதி 66’ படத்துக்காக தமிழில் அனல்பறக்கும் அரசியல் வசனங்களை பிரபல இயக்குநர் ராஜூ முருகன் எழுதும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் ‘குக்கூ’ என்னும் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராஜூ முருகன். அதைத்தொடர்ந்து ‘ஜோக்கர்’ என்னும் படத்தை இயக்கினார்.
குரு சேமசுந்தரம் நடிப்பில் வெளியான ‘ஜோக்கர்’ பல விருதுகளை வாங்கி குவித்தது. ராஜூ முருகன் இயக்குநராக மட்டுமல்லாது, ‘ஜிப்ஸி’, ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘தோழா’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி வசனகர்த்தாவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இந்நிலையில், ‘தளபதி 66′ படத்தில் அரசியல் பஞ்ச், சமூக அவலங்களை மையப்படுத்தும் வசனங்கள் அதிகம் இருக்கும் என படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.’ஜோக்கர்’ பெரிய ஹிட் அடிப்பதற்கு முக்கிய காரணம் படத்தின் வசனம். இதனால் ராஜூ முருகன் வசனத்தில் உருவாகும் தளபதி 66 மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் இப்போது இருந்தே எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.