தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் தாடி பாலாஜி அவர்கள். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தற்போது விஜய் டிவியில் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இதோடு மட்டுமல்லாமல் கலக்கபோவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நித்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். போஷிகா அவர்களுக்கு 5 வயதாக இருக்கும் பொழுதே இவர்கள் இருவருக்குமிடையில் அடிக்கடி கருத்து வேறுபடுகள் வர ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து இருவரும் இப்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு இவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழும் இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக கணவன் மனைவி இருவரும் பங்கு பெற்றார்கள். இந்த நிகழ்சிசியிலும் இவர்களுக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருந்தன.

இவ்வாறு இவர்களுக்கிடையே இருக்கும் பிரிவிற்கு காரணமாக நித்யா கூறுவது தாடி பாலாஜி மதுவுக்கு அடிமையானவர் என்றும் தன்னையும் தன் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்திவந்தார் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில் தான் நித்யாவை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தது விஜய் டிவி.
அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் பொழுதும் பாலாஜி நித்யா இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்பது போலவும் தான் பல தகவல்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னரும் அவர்கள் இடையேயான பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
தற்போது தாடி பாலாஜியின் மனைவி நித்யா செம மாடர்னாக மாற்றியிருக்கும் புகைப்படங்கள் வளைதளங்களில் வெளிவந்து நெட்டிசன்களை மிகவும் வியக்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மளமளவென வளர்ந்து விட்டார் தாடி பாலாஜியின் மகள் போஷிகா. அம்மா நித்யாவுடன் போஷிகா எடுத்துக்கொண்ட ரிசன்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி கொண்டிருக்கிறன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்மாவை சமாதானப்படுத்த வந்த குட்டி தேவதையா இது இப்போது இவ்வளவு அழகாக இருகிகிறாளே என்று அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கான சூப்பரான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார் நடிகை நித்யா. அம்மாவுக்கே டப் கொடுக்கிற அளவுக்கு ஸ்டைலிஷானா போஸ்களை கொடுத்திருக்கிறார் தாடி பாலாஜியின் மகள் போஷிகா.
இதையும் பாருங்கள்: ஏழு வருடம் கழித்து வெளிவர இருக்கும் அருண்விஜய் படம். எப்படி தான் எடுத்துள்ளார்கள் என பார்க்க விரும்பும் ரசிகர்கள்.
இத்துடன் தற்போது போஷிகா தனது அம்மாவுடன் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாடி பாலாஜியின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்தும் வருகின்றனர்.