Homeபுகைப்பட செய்திபட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட்டில் பட்டய கிழப்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ராஷ்மி ஆண்ட்டி

பட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட்டில் பட்டய கிழப்பும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ராஷ்மி ஆண்ட்டி

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்னனி தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மி கவுதம், வயது 34, ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி நிக்ழச்சி தொகுப்பாளினி. குறிப்பாக தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி  வருகிறார் நடிகை ராஷ்மி கவுதம்.

கடந்த 2002ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் நடிகர் உதய் கிரண் மற்றும் நடிகை ரிச்சா பாலோட் ஜோடியாக நடித்து வெளியான “ஹோலி” படத்தின் மூலமாக தன் திரை பயனத்தை தொடங்கினார் நடிகை ராஷ்மி. தெலுங்கு திரை உலகில் போராடியும் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை ராஷ்மி தெலுங்கு தொலைக்காட்சி உலகில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பான “யுவா” என்ற தொலைக்காட்சி தொடரில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை ராஷ்மி கவுதம் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற “ஐடியா சூப்பர்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று 5வது இடம் பிடித்தார். இதன் பின்னர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியானாக தொடர்ந்தார் நடிகை ராஷ்மி. தொலைக்காட்சி உலகில் தொகுப்பாளினியாக வலம் வந்தாலும் அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் நடிகை ராஷ்மி.

தமிழ் திரை உலகில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “வேதாளம்” படத்தை இயக்குநர் மெஹர் ரமேஷ் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகைகள் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு “போலோ ஷங்கர்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ராஷ்மி கௌதம்.

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஏக குஷியில் உள்ள நடிகை ராஷ்மி கவுதம் தொடர்ந்து அசத்தலான பிரத்யேக போட்டோஷூட்களில் நடித்து ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். சமீபத்தில் கூட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் டிரான்ஸ்பரன்ட் புடவையில் அட்டகாசமான போட்டோஷூட்டில் பங்கேற்றிருந்தார் நடிகை ராஷ்மி கவுதம்.

சற்று முன்