Homeடிவிசின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட்..பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட்..பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்

கேமிராவுக்கு முன் ஒரு பெண் நடிக்க வேண்டுமென்றால் அவர் பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி வரவேண்டியுள்ளது. அது சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ எல்லா இடங்களிலும் பெண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

abi

இப்படி பிரச்சனைகளையெல்லாம் கடந்து வந்து தற்போது பிரபலமாகியுள்ள பல பிரபலங்கள் தங்களது ஆரம்பர காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து மனம் திறந்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில், சின்னத்திரையில் பிரபலமான நடிகை அபி நவ்யா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ” நான் செய்திவாசிப்பாளராக இருக்கும்போதுதான் பிரியமானவள் என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தேன்.

abi

சீரியலில் நடிக்க வேண்டுமென்றால் அங்கு இருப்பவர்களில் யாரவது ஒருவர் நமக்கு தெரிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது கடினம். நான் இப்படி வாய்ப்பு தேடி செல்லும் போதெல்லாம் என் முகத்திற்கு நேரகாவே அட்ஜஸ் செய்து கொள்ள தயாரா என கேட்டார்கள்.

abi

சுமார் 250 ஆடிசனுக்கு மேல் பல இடங்களில் சென்றேன். பெரும்பால இடங்களில் இதையே தான் என்னிடம் கேட்டார்கள். இன்ஸ்டாகிராமில் ஒருவர் காஸ்டிங் டைரக்டர் என கூறி என்னிடம் அறிமுகமானார். அந்த நபர் என்னுடைய அங்க அடையாளத்தை கூறி தகாத முறையில் பேசினார். அவரை நான் கடுமையாக திட்டி விட்டேன்.

abi

புதிதாக திரைத்துறைக்குள் வர நினைக்கும் பலருக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கதான் செய்கிறது. ஏமாற்றும் ஆட்களும் அதிகம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் கவனமுடன் இருக்கவேண்டும். திரைத்துறையில் இன்னும் மீடூ புகார்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. எனவே பெண்களாகியா நாம் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும்” என்றார்.

abi

சின்னத்திரையில், ‘பிரியமானவள்’, ‘கயல்’, ‘சித்திரம்பேசுதடி’, ‘கண்மணி’, உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியகதாபாத்திரத்தில் அபிநவ்யா நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை நடிகரான தீபக்குமாரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடைப்பெற்றது. அபிநவ்யாவின் இந்த பேச்சால் சின்னத்திரை வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளது.

சற்று முன்