தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பின் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

தமன்னா சினிமாவில் மட்டுமின்றி, நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதையடுத்து வெப் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தமன்னா தற்போது புதிய வெப் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் நிர்வாணம், படுக்கையறை போன்ற காட்சிகளில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தமன்னாவிற்கு பல கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிகிறது.
முன்னதாக நடிகை சமந்தா ஃபேமிலி மேன் – 2 என்னும் வெப் தொடரில் படுக்கறை போன்ற காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிரவைத்தார். அந்த வகையில் தற்போது தமன்னாவும் களம் இறங்கியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

அதிக சம்பளத்திற்காக இதுபோன்ற காட்சிகளில் நடிகைகள் நடித்தாலும் இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் கதைக்கு தேவை எனக்கூறி பல கோடிகளில் சம்பளம் வாங்கி சென்று விடுகின்றனர்.