Homeபொழுதுபோக்கு'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை யாருன்னு தெரியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை யாருன்னு தெரியுமா?

வித்யாசமான கதை, சிறப்பான கதைகளம் என தமிழ்சினிமாவிலிருந்து மாறுப்பட்ட விதத்தில் வெளியான படம் ‘ஆரண்யா காண்டம்’. இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில், இவர் பிடித்தார்.

aaranya

ஆரண்யா காண்டம் படம் வெற்றி பெற்றதையடுத்து உடனே தனது அடுத்தப்படத்தை தொடங்காமல் நீண்ட இடைவெளியை தியாகராஜன் குமாரராஜா எடுத்துக்கொண்டார். இவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.

aaranya

இடைவெளி எடுத்து கொண்டு மிகவும் பொறுமையாக அடுத்த கதையை தியாகராஜன் குமாரராஜா தேர்வு செய்தார். அப்படி வெளியான படம் தான் ‘சூப்பர் டீலக்ஸ்’. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெவ்வேறு திசையில் பயணிக்கும் நான்கு கதாபாத்திரங்களையும் இறுதியில் ஒன்றாக இணைக்கும் விதமாக அமைந்திருந்தது.

SD

மேலும் இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

SD

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், ஃபகத் பாசில், சமந்தா, விஜய்சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவை.

Nadiya

குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் இந்த கேரக்டருக்காக முதலில் நதியா தேர்வு செய்யப்பட்டார். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போகவே, அதன் பின்னரே ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் இணைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்