இந்த வாரம் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. அனைத்து சீரியல் பிரியர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தநிலையில் இது விருந்தாக அமைந்திருக்கிறது. இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால் சிறிது நாட்களுக்கு முன்பாகவே துவங்கப்பட்ட கயல் என்னும் சீரியல் இதற்கு முன்பாக இருந்த அனைத்து சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த தகவல் அனைத்து சீரியல் பிரியர்களாலும் இணையதளத்தில் தூக்கி கொண்டாடப்பட்டு வருகிறது. கயல் சீரியலை பொறுத்தவரை, விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் மற்றும் யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் சைத்ரா இவர்களின் ஜோடி நன்றாக அமையவே, கல்லூரி மற்றும் பள்ளி படிக்கும் இளைஞர்களுக்கு இஷ்டமான சீரியலாக அமைந்துவருகிறது. ஆகையால் இந்த சீரியல் தன் வெற்றியை விட்டுக்கொடுக்காமல் தக்கவைத்துக் கொள்கிறது.
கயல் சீரியலை தொடர்ந்து சுந்தரி சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. டிக்டாக்கில் மாஸ் காட்டி வந்த கேபர்லா செல்லூஸ் தற்போது சுந்தரி நாடகத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக திரையில் மாஸ் காட்டி நடித்து வருகிறார். ஆகையால் இது கிராமத்து சீரியல் பிரியர்களுக்கு சிறந்த விருந்தாக அமைகிறது. அதோடு கயலை கடந்து இது முதலிடம் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இதை தொடர்ந்து மூன்றாவது சீரியலாக வானத்தைப்போல சீரியல் இடம் பிடித்திருக்கிறது. அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துரைத்து இதை அடுத்த பாசமலரை போல அமைத்திருகின்றனர். இதில் துளசி கேரக்டரில் ஸ்வேதாகில்ஜேவும் சின்ராசு கேரக்டரில் தமன்குமாரும் மிகச் சிறந்த முறையில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதைப் பின்தொடர்ந்து நான்காவது இடத்தை ரோஜா சீரியல் பிடித்துள்ளது. இதுவரை ரோஜா சீரியல் 2வது அல்லது 3வது இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தனக்கெனவே தக்கவைத்து வந்தது. ஆனால் தற்போது சென்டிமென்ட் சீரியல்களால் ரொமாண்டிக் சீரியல் பின்தள்ளப்பட்டுள்ளது.
இதோடு சேர்ந்து ஐந்தாவது இடத்தை கண்ணான கண்ணே சீரியல் பிடித்துள்ளது. கௌதம், மீரா கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் மிகச் சிறந்தமுறையில் நடித்து வருகிறார்கள். அடுத்ததாக ஆறாவது இடத்தில் அபியும் நானும் சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் அம்மாவிற்கும் மகளிருக்கும் ஏற்படும் பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் எடுக்கப்படும் அத்தனை சீரியல்களும் மக்களால் முக்கியமாக இல்லத்தரசிகளால் சிறந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது அதனால் டி.ஆர்.பி யும் எகிறிக் கொண்டே வருகிறது