Homeபொழுதுபோக்குதனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து - செளந்தர்யா செய்த திடீர் மாற்றம்!

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து – செளந்தர்யா செய்த திடீர் மாற்றம்!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Dhanush

இந்நிலையில், தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 18 ஆண்டுகள் நண்பர்களாக தம்பதிகளாக பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

Dhanush

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். இனி நானும் ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்து கொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் தனுஷ்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்றதொரு பதிவை ஐஸ்வர்யாவும் தனது சமூகவலைதளப்பக்கதில் பதிவிட்டுள்ளார். இருவரின் இந்த முடிவு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் இது ட்ரெண்டாகியும் வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை செளந்தர்யா தனது சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரின் டிபியை சிறுவயதில் ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை மாற்றியுள்ளார். செளந்தர்யாவின் இந்த ட்விட்டர் டிபியும் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

Dhanush

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் தங்கமகன் படத்திலிருந்து சமந்தாவுடன் தனுஷ் நெருக்கம் காட்டி வருகிறார் எனவும் தற்போது போயஸ் கார்டனில் புதிதாக வீடுகட்டிவரும் தனுஷூக்கு ரஜினி நிதி உதவி செய்யவில்லை எனவும், ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா சமீபத்தில் சிம்பு டாக்டர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்தி ட்வீட் செய்திருந்தார். இதனால் ரஜினி குடும்பத்தில் சர்ச்சை ஏற்பட்டதாகவும் பலர் தங்களது எண்ணங்களை கருத்துகளாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சற்று முன்