தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடகர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என பன்முக தன்மையுடன் செயல்பட்டு வருகிறார்.
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டெர்னஷ்னல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டெர்னஷ்னல், அடுத்தாக சிவகார்த்திகேயனை வைத்து புதியப்படத்தை தயாரிக்கவுள்ளது.இது தயாரிப்பு நிறுவனத்துக்கு 51ஆவது படமாகும். சிவகார்த்திகேயனுக்கு 21ஆவது படமாகும். இப்படத்தை கெளதம் கார்த்திக்கை வைத்து ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குவுள்ளார். ராஜ் கமல் இன்டெர்னஷ்னலுடன் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இதுகுறித்து கமல் தனது ட்விட்டரில், “சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி பிக்சர்ஸ் இந்தியா – ராஜ்கமல் இன்டெர்னஷ்னல், தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திக்கேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டார்.
சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.@sonypicsfilmsin & @RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி @Siva_Kartikeyan, இயக்குனர் @Rajkumar_KP போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்(1/2) pic.twitter.com/DSuGi6lXa6
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2022
இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில், “அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். கமல் சாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்❤️ Excited to join with two strong forces of cinema, Ulaganayagan @ikamalhaasan sir and @SonyPicsFilmsin 👍😊Thanks to my friend Director @Rajkumar_KP for making this happen❤️🤗 @vivekkrishnani #RMahendran sir pic.twitter.com/X6EuMmOfSy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 15, 2022
சிவகார்த்திகேயனை வைத்து கமல் படம் தயாரிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.