தமிழ் திரையுலகில் காதல் கிசுகிசுக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை வைத்து படம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல என சிம்புவைத்து படம் இயக்குநர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை இவர் மீது அடுக்கு அடுக்காக வைப்பதும் வழக்கமான ஒன்றுதான். அந்த அளவுக்கு சினிமாவில் சிம்பு அனுபவிக்காத பிரச்சினைகளே இல்லை என்று சொல்லலாம்.

பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு மிகக் கடுமையாக சிம்பு உழைத்தார். சிம்புவுக்கு நீண்டநாள்களுக்கு பின் பெயர் வாங்கி கொடுத்தப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.’மாநாடு’ படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘மாநாடு’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தாக கெளதம் மேனன் இயக்கும்
‘வெந்து தணிந்தது காடு’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிம்பு ‘பத்து தல’, ‘கொரனா குமார்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், வாணி போஜன், ரித்திகா சிங், அசோக் செல்வனை வைத்து ‘ஓ மை கடவுளே’ படத்தை இக்கிய அஷ்வத் மாரிமுத்து சிம்புவை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். கதையை கேட்ட சிம்புக்கு பிடித்து போகவே நடிக்க ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.

எனவே அடுத்தாக சிம்பு அஷ்வத் மாரிமுத்துடன் இணைவதாகவும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.