Homeபொழுதுபோக்குபோற பக்கமெல்லாம் எண்ட் கார்டா.. கல்லா கட்ட விடமாட்டங்க போல... மூன்றாவது முறையாக மோதும் விஜய்...

போற பக்கமெல்லாம் எண்ட் கார்டா.. கல்லா கட்ட விடமாட்டங்க போல… மூன்றாவது முறையாக மோதும் விஜய் – சிம்பு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது பிறமொழி பேசும் ரசிகர்களும் இருக்கின்றனர். விஜயை ரசிகர்கள் அடுத்த ரஜினியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

vijay

தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வரும் விஜய் அப்போது குட்டி கதை ஒன்னு சொல்லட்டுமா என கூறி அவர் சந்தித்த பிரச்சனைகள், அப்போது தமிழ்நாடு சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்கள் செய்யும் செயல் என அனைத்தையும் நையாண்டி கலந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் இந்த பேச்சு ரசிகர்களை வெகுவாக கவரும் அதுமட்டுமல்லாது ஊடகங்களுக்கு அடுத்த சில நாள்களுக்கு தலைப்பு செய்தியாகவும் இருக்கும்.

beast movie still

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதியப்படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

vijay

கரோனா பரவல் காரணமாக பொங்கல் வெளியாக இருந்த புது படங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களை குறிவைக்கிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதே தேதியில் கே.ஜி.எஃப் 2 படமும் இந்தியில் ஆமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சதா படமும் வெளியாகிறது. இதனால் வியாபார ரீதியா இப்படங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

simbu

‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ்நாட்டில் நன்றாக ஓடினால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வடமாநிலங்களில் ‘கே.ஜி.எஃப் 2’ வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதே போல் ‘லால் சிங் சதா’ வடமாநிலங்களில் நன்றாக ஓடினாலும் தென்னிந்தியாவில் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.

Vijay Simbu

இந்த ரேஸில் தற்போது சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படமும் இணைந்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் உலா வருகிறது.

Vijay

தகவலின் படி வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான அது ‘பீஸ்ட்’ படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. . ஏற்கனவே துப்பாக்கி – போடா போடி, மாஸ்டர் – ஈஸ்வரன் ஆகிய படங்கள் மோதிக்கொண்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பீஸ்ட் – வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் விஜய் – சிம்பு மோதிக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

சற்று முன்