சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகளும் சமூகவலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு புகைப்படங்களை பதிவிட்டு வருிகன்றனர். இவர்களுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகின்றன. சீரியல் நடிகைகள் பதிவிற்கும் இப்போது உடனே சமூகவலைதளத்தில் ரியாக்சன்கள் கிடைக்கின்றன.

அந்த வகையில், ‘ஆயுத எழுத்து’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற சீரியல்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா தூரடி. அதுமட்டுமல்லாது வேறு சில சீரியல்களிலும் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.
சீரியல்கள் சரண்யா பிஸியாக நடித்து வந்தால், அவ்வப்போது ஒய்வு நேரத்தில் போட்டோ ஷூட் எடுத்து அப்போது எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்தபுகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

இந்நிலையில், சரண்யா தூரடி தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் ஒரே டி-ஷர்டில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த சிங்கிள்ஸ் எங்கள சீண்டி பாக்குறதான் உங்களுக்கு வேலையா போச்சு என கருத்து பதிவிட்டு வருகின்றன.