Homeடிவிராஷ்மிகாவுக்கு போட்டியா குத்தாட்டம் போட்ட அம்மா நடிகை - வியப்பில் ரசிகர்கள்

ராஷ்மிகாவுக்கு போட்டியா குத்தாட்டம் போட்ட அம்மா நடிகை – வியப்பில் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகர் நடிகைகளை தற்போது ரசிகர்கள் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை போன்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சின்னத்திரை நடிகைகளின் விளம்பரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் என்ன செய்தாலும் உடனே பதிவிட அதுவும் வைரலாகி விடுகிறது.

meera

சின்னத்திரையில் ‘சித்தி 2’, ‘தமிழும் சரஸ்வதியும்’ உள்ளிட்ட மெகாத் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீரா கிருஷ்ணன். இவர் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மீரா கிருஷ்ணன், படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற சாமே…சாமே பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மீரா கிருஷ்ணனின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரா இப்படி ஆடுகிறார் என வியந்து பார்த்து தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

சற்று முன்