டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது இன்ஸ்டாகிராம், முக நூல், யுடியூப் என பல தளங்களில் கலக்கி வருகிறார். அதே போல சில தற்படங்களிலும் கம்மிட் ஆகி உள்ளார். அதே வேலையில் சில காமெடி நிகழ்ச்சிகள், குறும்படங்கள் போன்ற வற்றிலும் நடித்து வருகிறார்.
தனக்கே உரிய பாணியில், சில நேரங்களில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு வளர்ந்த கலைஞர்களில் இவரும் ஒருவர். சில நேரங்களில் இவருக்கும் வேறு சில டிக் டாக் பிரபலங்களுக்கும் இடையே நடக்கும் விவாதங்கள் கூட காமெடியாகவே முடிந்துள்ளன.
இப்படி ஒரு மொபைல் மூலம் உலகத்துக்கே அறிமுகமான ஜி.பி முத்துவின் வருமானமும் சற்று உயர்ந்துள்ளது தெரிகிறது. சமீபத்தில் நான்கு சக்கர வாகனம் ஒன்றை கூட அவர் வாங்கி இருந்தார். அதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற பேச்சும் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது.
அதற்க்கு ஏற்றார் போல பிக் பாஸ் செட்டிற்கு முன்பு நின்று ஜி.பி முத்து ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டும் இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதை கண்ட நடிகர் சதீஷ் அவர்கள் ஜி.பி முத்துவை கலாய்க்கும் வகையில் “உள்ள டாஸ்க் லெட்டர் மட்டும் படிக்க விட்றாதீங்கப்பா.. என்னடா டாஸ்க் கொடுத்திருக்கிங்க, நார பயலுவலா” இப்படி அவர் ட்வீட் செய்திருந்தார்.
இதை கண்ட முத்துவின் ரசிகர்கள் சிலர், இந்த மாதிரியான காமெடியெல்லாம் நீங்க ஏன் படத்துல பண்ண மாட்டேங்கறீங்க. படத்துல இந்த மாதிரி காமெடி பண்ணலாமே என்று சதீஷை கலாய்த்து வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…