சர்வைவரில் இருந்து வெளிவந்த பார்வதி வெளியிட்ட புகைப்படம். இதனை பார்த்து பார்வதியை பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

parvathi

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை ஒரே இடத்தில் சேர்த்து, அவர்களுக்கு பலவித சவால்களை கொடுத்து அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன.

sur
survaivar

18 போட்டியாளர்களை இரு அணியாக காடர்கள், வேடர்கள் என பிரித்து இரு தீவுகளில் அவர்களை தனித்தனியாக அனுப்பி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது. எவ்வளவு வசதியான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தாலும் இங்கு தங்குவதற்கு வீடு, உணவு எதுவுமே இல்லாமல் கிடைப்பதை வைத்து வாழக் கூடிய சூழ்நிலையில் தான் அனைத்து போட்டியாளர்களும் இருக்கின்றனர்.

அவ்வாறு நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இதில் பங்கு பெற்றுள்ள பார்வதியை பற்றி பலவித சர்ச்சைகள் எழுந்தன அவரது பேச்சும் நடத்தையும் பலருக்கும் எரிச்சலூட்டும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியிலும் தனது குழுவுடன் இவரால் மற்றவர்களைப் போல சகஜமாக சேர்ந்து கொள்ள முடியவில்லை.

par
parvathi

ஆதலால் முதல் வாரத்திலேயே தனது குழுவினால் இவர் நாமினேட் செய்யப்பட்டது ஆனால் குழுவின் தலைவியான லட்சுமி சிருஷ்டியை தேர்வு செய்ததால் இவர் எலிமினேஷனிலிருந்து தப்பித்தார். பிறகு இரண்டாம் வாரமும் இவர் நாமினேஷன் செய்யப்பட்டு மூன்றாம் உலகத்திற்கு அனுப்பப்பட்டார்.

மூன்றாம் உலகத்திற்கு அனுப்பப்படும் பார்வதி நிச்சயம் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த வாரம் ராம் மற்றும் பார்வதிக்கு நடந்த போட்டியில் பார்வதி வெற்றி பெற்றதால் ராம் அவர்கள் வெளியேறினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பார்வதி போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. பார்வதி பேசிய பேச்சை தாங்க முடியவில்லை என்று மற்ற போட்டியாளரான காயத்ரி கூறியிருந்தார்.

parvathi
parvathi

இந்த நிலையில்தான் இந்த வாரம் காயத்ரி மற்றும் பார்வதிக்கும் இடையே போட்டி நிலவியது. முன்னரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பார்வதி போட்ட ஆட்டம் பற்றி காயத்ரிக்கு தெரியும். எனவே இந்த போட்டியில் எப்படியாவது பார்வதியை தோற்கடிக்க வேண்டும் என்று காயத்ரி உறுதியாக களமிறங்கினார். அவ்வாறே காயத்ரி சிறப்பாக விளையாடியதால் பார்வதி தோல்வியடைந்தார். எனவே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு வெளிவந்த பார்வதி சர்வைவர் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தான் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், திரும்பி வந்ததற்கு பிறகு தான் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டிருந்தார்.இதில் தனது அழகான, பொலிவான பழைய முகத்தை மிஸ் செய்வதாக கூறியிருந்தார்.

vj

இதனை பார்த்த ரசிகர்கள் பழைய புகைப்படம் மேக்கப்புடன் இருக்கிறது. இது மேக்கப் இல்லாமல் இருக்கிறது. அவ்வளவுதான் இதில் என்ன வித்தியாசம் என்று பார்வதியை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment