Homeபிக் பாஸ்பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சார்பட்டா பரம்பரை பட நடிகர். அப்போ குத்து சண்டை கன்பார்ம்...

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சார்பட்டா பரம்பரை பட நடிகர். அப்போ குத்து சண்டை கன்பார்ம் போலயே என்று கூறிவரும் ரசிகர்கள்.

பிக் பாஸ் சீசன் 5 துவங்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து அதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந்த சீசனில் யார் கலந்துகொள்ளப்போகிறார், யாரெல்லாம் எப்படி நடந்துகொள்ள போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வவ்போது வந்த வண்ணமே உள்ளது. அதில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்ன வென்றால் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் பிக் பிக் பாஸ்ஸில் கலந்துகொள்ள போகிறார் என்பது தான். யார் அவர் என்று பார்ப்போம் வாருங்கள்.

கடந்த நான்கு சீசன்களாக தொடர்ச்சியாக TRPயில் முதல் இடத்தை பிடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த முறையும் அதே முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டியாளர்களை கூடுதல் கவனத்தோடு தேர்ந்தெடுத்துள்ளார்கள். காரணம் தொலைக்காட்சிகளுக்கு இடையேயான போட்டி அதிகரித்துள்ளது.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் தற்போது சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதே போல சன் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இப்படி எந்த சேனலின் நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்ற போட்டி துவங்கியுள்ளது.

இதற்கிடையில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் ஐ.பி.எல் போட்டி வேறு ஒளிபரப்பாகிறது. இதை எல்லாம் கடந்து இம்முறையும் பிக் பாஸ் முதல் இடத்தை பிடிக்க விஜய் டீவி பிரபலங்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுளள்னர். அதில் தொகுப்பாளினி பிரியங்கா, டான்சர் சுனிதா உள்ளிட்டோர் அடக்கம்.

santhosh prathap

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் “ராமன்” கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்றாலும் இவருக்கு அதிக அளவில் பெயர்வாங்கி கொடுத்தது சார்பட்டா பரம்பரை படம் தான் என்றே கூறலாம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து, இனி பாக்ஸிங் போட்டி பிக் பாஸ் வீட்டிலும் ஆரமிக்கப்போகுது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

சற்று முன்