மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை சமந்தா. தெலுங்கில் நானி, சுதீப் உடன் ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம் தமிழிலும் வெளியாகியது. அதன் பின்னர் தமிழ் முன்னணி நடிகர்கள், சமந்தாவுடன் நடிக்க போட்டி போட்டுக் கொண்டு கால்ஷீட் கொடுத்தனர். விஜய் தனுஷ், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து மிகப் பிரபலமானார் நடிகை சமந்தா.

அதன் பின்னர் சித்தார்த்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பல கோவில்களில் அவர்கள் இருவரும் சேர்ந்த பரிகார பூஜை செய்த படங்கள் வெளியாகின. பின்னர் இருவரும் பிரிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் சமந்தாவின் பட வாய்ப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வெற்றிக் கொடி நாட்டினார்.
பின்னர் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகர் நாகார்ஜுனா வின் மகன் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னரும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தமிழில் இவர் ஹீரோயினாக நடித்த தெறி, மெர்சல், சீமராஜா போன்ற படங்கள் நன்றாகவே கல்லா கட்டியது. இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக அவர் நடித்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும் OTT யில் அவர் நடிக்கும் வெப் சீரிஸ்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. நயன்தாராவுக்கு அடுத்தபடி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை சமந்தா என்றே கூறப்படுகிறது.

திருமணமான பின்னரும் கூட சமந்தா அதிக கவர்ச்சியில் நடிப்பதற்கு தடையேதும் இல்லை. மிகப்பெரிய குடும்ப பின்னணி என்பதால் அவர் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பதில் நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு ஈடுபாடு இல்லை என தெரிகிறது. இருப்பினும் சமந்தா அதை கண்டுகொள்வதாக இல்லை. இதனால் குடும்ப வாழ்க்கையில் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சமந்தா அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட்கள் நடத்தி ரசிகர்களை கிறங்கடிப்பதில் வல்லவர்.

ஆனால் தற்போது நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிக்ஸ் பேக்குடன், கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் நடிகர்களுக்கு சவால் விடும் தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். சிக்ஸ் பேக் வைத்து அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு குவிந்துள்ளது. இது புதிதாக அவர் கமிட் ஆகியிருக்கக்கூடிய படங்களுக்காகவா என ரசிகர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.



