Homeபொழுதுபோக்குசமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின், சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் முதல் போட்டோ...

சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின், சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் முதல் போட்டோ பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவர் சமந்தா.நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அனைவரின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அதன்பின் மிகவும் அழகாகவே இவர்களது காதல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. சமந்தாவும் கல்யாணத்துக்குப் பின் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே அவர் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் திருமணத்துக்குப் பின்பு நான் நடிப்பேன் என்று அதே போல் அவரும் நடித்துக் கொண்டிருந்தார்.

sama
samantha

தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து செய்தி தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ஆரம்பகட்டத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என்றே அனைவரும் நம்பினர். கண்டிப்பாக இருவரும் விவாகரத்து செய்ய மாட்டார்கள் என்றே அவர்கள் ரசிகர்களும் அவர்கள் மேல் பெரும் நம்பிக்கையை வைத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக நாகசைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்ததும் அவரது ரசிகர்களுக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்தியது. அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்த ஜோடி ஏன் திடீரென்று விவாகரத்து செய்து கொண்டனர் என அனைவருக்குள்ளும் கேள்வியாகவே உள்ளது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை இந்த விவாகரத்திற்கு சொன்னாலும் உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதே உண்மை. இதற்கிடையில் சமந்தா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்த சமந்த அக்கினெனி என்ற பெயரை மாற்றி வெறும் சமந்தா.S என்று வைத்துக் கொண்டார்.

sama
samantha

நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமாகிய நாகார்ஜுன் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா நாக சைதன்யாவின் விவாகரத்து எங்களுக்கும் பெரிய மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்களும் இதை எதிர்பார்க்கவில்லை என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

sama
samantha

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து சமந்தா எந்த ஒரு பதிவையும் தனது இன்ஸ்ட பக்கத்தில் போடவில்லை தற்போது திடீரென்று அவர் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு ஆண் நண்பருடன் இருப்பது போல் அந்த போட்டோ இருக்கிறது. அந்த ஆண் நண்பர் யார் என்று தெரியவில்லை. தற்போது இந்த போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது.

sama
samantha

மேலும் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி சமந்தா மற்றும் நாகசைதன்யா தங்களது நான்காவது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் தற்பொழுது இந்த ஒரு விவாகரத்து செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

சற்று முன்