Homeபொழுதுபோக்குகவர்ச்சியை காட்டியே 82 லட்சத்திர்க்கு கார் வாங்கிட்டாங்க இந்த பிக் பாஸ் நடிகை என முணுமுணுக்கும்...

கவர்ச்சியை காட்டியே 82 லட்சத்திர்க்கு கார் வாங்கிட்டாங்க இந்த பிக் பாஸ் நடிகை என முணுமுணுக்கும் ரசிகர்கள் – காருடன் போட்டோ வெளியிட்ட நடிகை

சாக்ஷி அகர்வால் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள அல்மோரா எனும் ஊரில் பிறந்து இருக்காங்க. இவங்களோட அப்பா ராஜஸ்தான் அம்மா பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவங்க சாக்ஷி அகர்வால் பிறந்தவுடன் அவங்க ஃபேமிலி சென்னையில செட்டில் ஆயிட்டாங்க. அகர்வால் க்கு சமிக்ஷா அகர்வால் னுஒரு தங்கச்சியும் இருக்காங்க.

Sakshi Agarwal

இவங்க தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் ஸ்கூல்ல முடிச்சிருக்காங்க. ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனது மட்டுமில்லாம சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அப்படின்ற படிப்ப முடிச்சு அதுல கோல்ட் மெடல் வாங்கி இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் எம்பிஏ பெங்களூரிலுள்ள சேவியர் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்ல படிச்சு அங்கேயும் கோல்டு மெடல் வாங்கி இருக்காங்க.

படிப்பில் மட்டும் இல்லாம கராத்தே கிக்பாக்ஸிங் களையும் சாம்பியன் பட்டம் வாங்கி இருக்காங்க. படிப்புல கோல்ட் மெடல் வாங்கிய சாக்ஷி ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்தாங்க.

Sakshi Agarwal

இவங்க வெளியில போய் வேலை பார்க்கிறது இவங்க பேமிலில இவங்களுக்கு பெரிய எதிர்ப்பா இருந்துச்சு பிறகு அம்மாவோட சப்போர்ல தான் வேலையில ஜாயின் பண்ணாங்க இவங்க எம்பிஏ படிக்கும் போதே சின்னச்சின்ன மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்ததுனால டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சுச்சு. கல்யாண் சில்க்ஸ், எஸ் எஸ் கே கம்ப்யூட்டர், மலபார் கோல்ட், சரவணா ஸ்டோர்ஸ், சக்தி மசாலா அப்படின்னு 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடிச்சிருக்காங்க. டிவி விளம்பரங்கள் தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே இவங்க லார்ஜ் ஏஜென்சி ல இருக்க ப்ளீஸ் கால் ஸ்பேஸ் வேடர் அண்ட் லிங் இன்ஸ்டியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் முடித்து இருக்காங்க. தென்னிந்தியாவிலேயே இந்த ஆக்டிங் கோர்ஸ் முடித்த ஒரு நடிகை இவங்க மட்டும்தான்.

சாக்ஷி அகர்வால் முதல் படம் 2013ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் தான் முதலில் நடிச்சிருக்காங்க. இந்த படத்துலயும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடிச்சிருக்காங்க அதுக்கப்புறம் 2015 ஆம் ஆண்டு வெளியான யூகன் அப்படிங்கிற படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகியா நடிச்சிருக்காங்க.

அதைத்தொடர்ந்து கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க படத்துல ஹீரோயினாகவும், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாகவும் நடித்து வந்தாங்க இதைத்தொடர்ந்து அரண்மனை 3 போன்ற படத்தில் நடிச்சு முடிச்சு லட்சுமிராய் கூட ஜிங்கிள் படம் நடிச்சு வராங்க.

sakshi agarval

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர்றதுக்கு முன்னாடி சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பனசுந்தரி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி இருக்காங்க. அதுக்கப்புறம்தான் பிக்பாஸ் சீசன் 3ல கலந்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிட்டாங்க. பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் சில படவாய்ப்புகள் தொடர்ந்து வரவே இப்போது 82 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி, அந்த காரோடு சேர்ந்து நின்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகை படத்தை பார்த்த சிலர், கவர்ச்சியை காட்டியே கார் வாங்கி விட்டார் என்று இன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்