Homeபொழுதுபோக்குஒன்னு இது...இல்ல அது 'ஆர்ஆர்ஆர்' படக்குழு வெளியிட்டுள்ள புதிய அப்டேட் என்னானு தெரியுமா? - விபரங்கள்...

ஒன்னு இது…இல்ல அது ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்டுள்ள புதிய அப்டேட் என்னானு தெரியுமா? – விபரங்கள் உள்ளே

“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

RRR

“ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நடனமாடி அதன் வீடியோக்ககளை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

RRR

“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் முதலில் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையும் ஆரம்பமானது.

RRR

ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநில அரசுகள், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், “ஆர்ஆர்ஆர்” படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் வெளியிட்டு தேதி குறித்தான அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ” நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்து, அனைத்து திரையரங்குகளும் 100 விழுக்காடு திறந்தால் மார்ச் 18, 2022 அன்று படத்தை வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையெனில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஏப்ரல் 28 அன்று வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு வெளியிட்டு தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்