Homeபொழுதுபோக்குஹீரோக்கள் சம்பளத்தை விட்டு கொடுப்பார்களா ? - ஆர்ஆர்ஆர் படத்துக்கு வந்திருக்கும் புது சோதனை

ஹீரோக்கள் சம்பளத்தை விட்டு கொடுப்பார்களா ? – ஆர்ஆர்ஆர் படத்துக்கு வந்திருக்கும் புது சோதனை

“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

RRR

“ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நடனமாடி அதன் வீடியோக்ககளை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

RRR

“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் முதலில் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையும் ஆரம்பமானது.

RRR

ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநில அரசுகள், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், “ஆர்ஆர்ஆர்” படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

RRR

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் வெளியாகும் என படக்குழு நேற்று (ஜனவரி 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் தொடர்ந்து தாமதம் ஆனதால் 150 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்றும், இதனால் ராஜமௌலி கடும் பிரச்சனையில் இருக்கிறார் என கூறப்படுகிறது.

RRR

இதனால் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் சம்பளத்தை விட்டுக்கொடுக்க அவர் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு ஹீரோக்களுக்குமே தலா 65 கோடி ருபாய் சம்பளம் பெறுகின்றனர். அதன் ஒரு பகுதி படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் தரப்பட இருக்கிறது என்றும், நஷ்டத்தை தவிர்க்க அதை விட்டுக்கொடுக்க கேட்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

சற்று முன்