சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன்.
‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்தது. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சில சூழ்நிலை காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதன் பின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ரோஷினி அந்த தொலைக்காட்சிக்கு திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஷினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாகவும் அதனால் தான் தொடரை விட்டு விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே ரோஷினி மீண்டும் தொலைக்காட்சிக்கே திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி தொலைக்காட்சிக்கு திரும்பிய ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்காமல், குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரும்பி வந்துட்டேனு சொல்லு என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…