தமிழ் திரையுலகில் இப்பொழுதெல்லாம் கதாநாயகன் கதாநாயகியை விட படத்தின் கதைக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. கதையின் கரு தரமாக இருந்தது என்றால் ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்படும்படங்களளும் கூட தோல்வி அடைகின்றன நிலையில் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதைக் களத்தோடு வெளிவரும் படங்கள் மாபெரும் வெற்றியை கொடுக்கின்றன. அவ்வாறு சில காலங்களுக்கு முன்பு வெளிவந்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற தமிழ் படம்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் கதை சற்று வித்தியாசமான கதைக் களத்தோடு இருந்தது. இந்த படம் நல்ல காமெடியாகவும், சுறுசுறுப்பாகவும் ஒவ்வொரு காட்சிகளும் நகர்ந்து கொண்டிருக்கும். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் மம்முட்டி அவர்களின் மகன் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
மேலும் துல்கர் சல்மானுக்கு இதுதான் 25வது படமாகும். இப்படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் இதன் கதையயே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சில காட்சிகளில் முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவருடன் ரக்ஷன் மற்றும் புதுமுக கதாநாயகிகளும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரித்து வர்மா. இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பெற்றிருந்தார். இந்தபடத்ததில் மிகவும் அப்பாவியாக தோற்றம் அளித்து அழகாக இருக்கும் இவர் படத்தின் மறுபாதியில் அதற்கு நேர்மாறாக மற்றவரை ஏமாற்றி பணம் பறிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரியவரும். இவ்வாறு தனது வித்தியாசமானநடிப்பபினால் பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகை ரித்து வர்மா.
இவர் ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர். அதுமட்டுமல்லாமல் இவர் சிறந்த மாடல் அழகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் முதன் முதலாக அடி எடுத்து வைத்த திரைப்படம் பாட்ஷா என்ற தெலுங்குத் திரைப்படமாகும்.
இவர் தமிழில் முதல் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி-2 என்ற படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தனுஷ் பணிபுரியும் கம்பெனியின் முதலாளியாக நடித்திருந்தார். இதுவரை இவர் தான் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

தற்போது பல கதாநாயகிகள் செய்யும் அதே வேளையயை இவரும் செய்துள்ளார். தனது புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்ததில் இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி உடையில் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன பப்ஜி 3 ஜாக்கெட்டா என இவரை படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.